தேன் என்றாலே எல்லோருக்கும் பிடிக்கும் அந்த தேனை எல்லாம் பொருள்களிலும் நாம் பயன்படுத்துகிறோம்
அந்தத் தேனை சேகரித்து கொடுக்கும் தேனீக்கள் மிகப் பெரிய அற்புதங்களை செய்து வருகிறது அப்படி என்ன அற்புதங்கள் செய்து வருகிறது என்பதை பார்ப்போம்
மிகச்சிறந்த அறிவியலாளரான ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் கூறுகிறார் இவ்வுலகத்தில் தேனீக்கள் இல்லையென்றால் மனிதர்களால் நான்கு ஆண்டுகளுக்கு மேலாக உயிர் வாழமுடியாது என்கிறார்.
‘மலைகளிலும், மரங்களிலும், மனிதர்கள் கட்டுபவற்றிலும் கூடுகளை நீ அமைத்துக் கொள்! பின்னர் ஒவ்வொரு கனிகளிலிருந்தும் சாப்பிடு! உனது இறைவனின் பாதைகளில் எளிதாகச் செல்!’ என்று உமது இறைவன் தேனீக்களுக்கு அறிவித்தான். அதன் வயிறுகளிலிருந்து மாறுபட்ட நிறங்களையுடைய பானம் வெளிப்படுகிறது. அதில் மனிதர்களுக்கு நோய் நிவாரணம் உள்ளது. சிந்திக்கின்ற சமுதாயத்திற்கு இதில் சான்று உள்ளது.
திருக்குர்ஆன் 16:68,69
இவ்வசனத்தில் தேன் எவ்வாறு உற்பத்தியாகின்றது என்ற உண்மை கூறப்படுகிறது.
பெரும்பாலான மக்கள் இன்று கூட தேன் எப்படி உற்பத்தியாகிறது என்பதை அறிந்திருக்கவில்லை. தேனீக்கள் மலர்களிருந்து தேனை உறிஞ்சி வந்து கூடுகளில் சேமித்து வைக்கின்றன என்று தவறாக விளங்கி வைத்திருக்கின்றனர்.
உண்மை என்னவென்றால் மலர்களிலும், கனிகளிலும் உள்ள குளூக்கோஸை, தேனீக்கள் உணவாக உட்கொள்கின்றன. உட்கொண்ட பிறகு அவற்றின் வயிற்றுக்குள் சென்ற பொருள் மாற்றமடைந்து, அதன் வயிற்றிருந்து வெளிப்படுகின்ற ஒரு கழிவு தான் தேன்.
இதை இன்றைய விஞ்ஞானிகள் நிரூபித்திருக்கின்றார்கள். ஆனால் 14 நூற்றாண்டுகளுக்கு முன்னால் அருளப்பட்ட திருக்குர்ஆன் ‘தேனீக்கள் தேனை உணவாகச் சாப்பிடுகின்றன’ எனக் கூறுகிறது. ‘நீ சாப்பிடு!’ என்ற கட்டளையிருந்து இதனை விளங்கலாம்.
சாப்பிட்ட பிறகு அதன் வாயிருந்து தேன் வெளிப்படுகிறது என்று சொல்லாமல், ‘அதன் வயிறுகளிருந்து தேன் வெளிப்படுகிறது’ என்று 14 நூற்றாண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்த எந்த மனிதனாலும் கூறுவதற்குச் சாத்தியமில்லை.
அத்துடன் தேனீக்கள் தேனைத் தேடுவதற்காக மிக எளிதாகச் சென்று விட்டு, எளிதாகத் தங்கள் கூட்டுக்கு வந்து சேர்ந்து விடுகின்றன என்ற அறிவியல் உண்மையும் இணைத்துச் சொல்லப்படுகிறது.
அதன் வயிறுகளிலிருந்து மாறுபட்ட நிறங்களையுடைய பானம் வெளிப்படுகிறது. அதில் மனிதர்களுக்கு நோய் நிவாரணம் உள்ளது. சிந்திக்கின்ற சமுதாயத்திற்கு இதில் சான்று உள்ளது.
திருக்குர்ஆன் 16:68,69
தேனில் இருக்கின்ற மருத்துவக் குணத்தை எல்லா விதமான மருத்துவத் துறையினரும் ஒப்புக் கொள்கின்றனர். அதுவும் இவ்வசனத்தில் கூறப்படுகிறது. இவை மனிதனது வார்த்தை இல்லை என்பதை மிகத் தெளிவாக உணர்த்துகின்ற வசனமாகும்
சற்று சிந்தித்துப் பாருங்கள் எழுதவும் படிக்கவும் தெரியாத ஒருவர் இச் செய்தியை அறிவிக்கிறார் இது தன்னுடைய வார்த்தை இல்லை என்றும் இது இறைவனின் வார்த்தை என்றும் நான் இறைவனின் அடிமை என்றும் கூறுகிறார் சாதாரண ஒரு மனிதரால் ஒரு தேனை எடுத்து அது உணவை இப்படி உட்கொள்கிறது இதன் மூலமாக அது வெளிப்படுகிறது என்பதெல்லாம் இன்றைய நவீன கருவிகள் இல்லாமல் ஆராய முடியாது ஆனால் இவரோ ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு முன்பாகவே இச்செய்தி அறிவித்துள்ளார் இத்தனையும் அறிவித்து இவர் தன்னை இறைவன் என்று சொல்லவில்லை இறைவனின் தூதர் இறைவனின் அடிமை என்றே சொல்கிறார் இவர் தான் முஹம்மது நபி ஸல்