இறைவனின் தூதர்கள்; படைத்த இறைவன் ஒருவனையே வணங்கி வரவேண்டும் என்றும் அவன் அல்லாமல் எந்த படைப்பினங்களையும் வணங்கக் கூடாது என்றும் கண்டிப்பான முறையில் தத்தமது மக்களுக்கு கற்றுக் கொடுத்தார்கள் அதனடிப்படையில் ஆங்காங்கே தர்மத்தையும் நிலைநாட்டினார்கள் ஆனால் இறைத்தூதர்களின் மறைவுக்குப் பிறகு பிற்கால மக்கள் தவறான தூண்டுதலால் அவர்களின் போதனைக்கு மாற்றமாக இறைத்தூதர்களுக்கும் மற்ற புண்ணிய மஹான்களுக்கும் நினைவுச்சின்னங்கள் எழுப்பினார்கள் நாளடைவில் நினைவுச்சின்னங்கள் வழிபாட்டுத் தலங்களாக மாறின.
இவ்வாறு மக்கள் உவமை இல்லாத இறைவனுக்கு பதிலாக அற்பமான பொருட்களை எல்லாம் கடவுள் என்று நம்ப துவங்கினர் உண்மையான இறை உணர்வும் பயபக்தியும் சிதைக்கப்பட்டன அதைத்தொடர்ந்து மக்கள் தயக்கமின்றி பாவங்கள் செய்யத் துவங்கினார் இவற்றோடு கடவுளின் பெயரால் மக்களை சுரண்டி பிழைக்க இடைத்தரகர்களும் அவர்கள் அவிழ்த்துவிட்ட மூடநம்பிக்கைகளும் என பல தீமைகளும் சேர்ந்து பூமியில் அதர்மத்தை வளர்த்தன.
மீண்டும் தர்மம் நிலைநாட்டப்படும் :
இவ்வாறு அதர்மம் பரவிய போதெல்லாம் தர்மத்தை நிலைநாட்டுவதற்காக மீண்டும் மீண்டும் இறைத்தூதர்களை அனுப்பப்பட்டன அவர்கள் மேற்கண்ட அடிப்படை போதனைகளை மக்களிடையே விதைத்து மீண்டும் தர்மத்தை நிலைநாட்ட சென்றன அந்த இறைத் தூதர்கள் வரிசையில் இறுதியாக வந்தவர் தான் முஹம்மது நபி ஸல் அவர்கள்
وَلَـقَدْ بَعَثْنَا فِىْ كُلِّ اُمَّةٍ رَّسُوْلًا اَنِ اعْبُدُوا اللّٰهَ وَاجْتَنِبُوا الطَّاغُوْتَ فَمِنْهُمْ مَّنْ هَدَى اللّٰهُ وَمِنْهُمْ مَّنْ حَقَّتْ عَلَيْهِ الضَّلٰلَةُ فَسِيْرُوْا فِىْ الْاَرْضِ فَانْظُرُوْا كَيْفَ كَانَ عَاقِبَةُ الْمُكَذِّبِيْنَ
மெய்யாகவே நாம் ஒவ்வொரு சமூகத்தாரிடத்திலும், “அல்லாஹ்வையே நீங்கள் வணங்குங்கள்; ஷைத்தான்களை விட்டும் நீங்கள் விலகிச் செல்லுங்கள்” என்று (போதிக்குமாறு) நம் தூதர்களை அனுப்பி வைத்தோம்; எனவே அ(ந்த சமூகத்த)வர்களில் அல்லாஹ் நேர்வழி காட்டியோரும் இருக்கிறார்கள்; வழிகேடே விதிக்கப்பெற்றோரும் அவர்களில் இருக்கிறார்கள்; ஆகவே நீங்கள் பூமியில் சுற்றுப்பயணம் செய்து, பொய்யர்களின் முடிவு என்ன ஆயிற்று என்பதைக் கவனியுங்கள்.
(அல்குர்ஆன் : 16:36)
அதர்மம் அந்தந்தக் காலத்து இறைத்தூதர்களின் பெயரால் அல்லது நாட்டின் பெயரால் அல்லது மதத்தின் பெயரால் அறியப்படும் ஆனால் தாய் மதமோ இறைவனுக்கு கீழ்படிதல் என்ற பண்பு பெயரால் அறியப்படும்
தாய் மதத்தின் முக்கிய இலக்கணங்கள் :
ஒன்றே குலம் ஒருவனே இறைவன் என்பதை அசைக்கமுடியாத அடிப்படையாகக் கொண்டிருக்கும் அதன் மூலம் தனி மனிதன் நல்லொழுக்கத்திற்கு வழி கொடுக்கும்
மானிட சமத்துவத்தையும் உலக சகோதரத்துவத்தையும் வலியுறுத்தும்; அவற்றை நிலைநாட்டும்; பிரிவினை வாதங்களுக்கு துணை போகாது.
மனித இனத்தை பிடித்திருக்கும் சமூக தீமைகளிலிருந்தும் அடிமைத் தளைகளில் இருந்து விடுவிக்க தீர்வு காணும் ஆன்மீகம் மட்டும் கூறிக்கொண்டு இல்லாமல் மனித வாழ்வின் அனைத்து துறைகளுக்கும் வழிகாட்டக்கூடிய தாக இருக்கும்
இடைத்தரகர்களுக்கு கடவுளின் பெயரால் சுரண்டல்களுக்கும் இடமளிக்காது எளிமையான நடைமுறை சாத்தியமான அறவே செலவில்லாத வழிபாட்டை கற்பிக்கும்
இறைவனை வழிபடுவதும் இறைவேதத்தை படிப்பதும் எல்லோருக்கும் சம உரிமையை கொடுக்கும்; ஏற்றத் தாழ்வுகள் இல்லாமல் அனைவரையும் ஒரே ஆண் ஒரே பெண்ணிலிருந்து பிறந்தவர்கள் என்ற அடிப்படையில் எல்லோரும் சகோதர சகோதரிகள் என்ற உண்மையை நிலைநாட்டும்
இந்த அடிப்படையில் பார்க்கும் போது இஸ்லாம் நம் தாய் மதம்(தாய் மார்க்கம்) என்ற உண்மையை நாம் அறிந்து கொள்ளலாம்.