இஸ்லாம் பெண்களுக்கு வழங்கியுள்ள சட்ட உரிமைகள்

இஸ்லாமிய சட்டத்தின்படி ஆணும் பெண்ணும் சரிசமம்! ஆண்களுடைய உயிரும் பொருளும், பெண்களுடைய உயிரும் பொருளும் ஒன்றுபோல பாதுகாக்கப்படும் என இஸ்லாமிய ஷரீஅத் உறுதியளித்துள்ளது. ஒரு ஆண் ஒரு பெண்ணை கொன்று விட்டால் ஷரிஅத் சட்டத்தின்படி அதற்குப்பதிலாக அவனுக்கும் மரண தண்டனை விதிக்கப்படும். ஒரு ஆணை கொலை செய்தவனை பழிக்குப் பழி என்ற சட்டத்தின்படி கொலை செய்யப்படுவதை போலவே பெண்ணை கொன்ற ஆணும் பழிதீர்க்க படுவான் ஒரு பெண் கொலை காரியத்தை செய்து இருந்தாலும் அவளுக்கும் அதே தண்டனை நிறைவேற்றப்படும்.

ஈமான் கொண்டோரே! கொலைக்காகப் பழி தீர்ப்பது உங்கள் மீது விதிக்கப்பட்டுள்ளது- சுதந்திரமுடையவனுக்குச் சுதந்திரமுடையவன்; அடிமைக்கு அடிமை; பெண்ணுக்குப் பெண் இருப்பினும் (கொலை செய்த) அவனுக்கு அவனது (முஸ்லிம்) சகோதரனா(கிய கொலையுண்டவனின் வாரிசுகளா)ல் ஏதும் மன்னிக்கப்படுமானால், வழக்கமான முறையைப் பின்பற்றி (இதற்காக நிர்ணயிக்கப் பெறும்) நஷ்ட ஈட்டைக் கொலை செய்தவன் பெருந்தன்மையுடனும், நன்றியறிதலுடனும் செலுத்திவிடல் வேண்டும் – இது உங்கள் இறைவனிடமிருந்து கிடைத்த சலுகையும், கிருபையுமாகும்; ஆகவே, இதன் பிறகு (உங்களில்) யார் வரம்பு மீறுகிறாரோ, அவருக்குக் கடுமையான வேதனையுண்டு.
நல்லறிவாளர்களே! கொலைக்குப் பழி தீர்க்கும் இவ்விதியின் மூலமாக உங்களுக்கு வாழ்வுண்டு (இத்தகைய குற்றங்கள் பெருகாமல்) நீங்கள் உங்களை(த் தீமைகளில் நின்று) காத்துக் கொள்ளலாம்.
(அல்குர்ஆன் : 2:178,179)

உடல்ரீதியாக குறைபாட்டை உண்டாக்கினால் இஸ்லாமிய சட்டத்தின் பிரகாரம் ஆண் பெண் பாகுபாடு பார்க்காமல் ஒரே மாதிரியான தண்டனையே வழங்கப்படும்.

ஒருவர் யாரையேனும் கொலை செய்துவிட்டால் பழிக்குப் பழி என்ற சட்டத்தின்படி கொன்றவரை பழி தீர்க்க வேண்டும் அதனை கொலையானவர் வாரிசு தான் முடிவு செய்ய வேண்டும் ஒருவேளை கொலையானவரின் வாரிசாக ஒரு பெண் மட்டும் இருந்தாலும் அவளுக்கும் அதே உரிமை கொடுக்கப்படும், அவள் விரும்பினால் குற்றவாளியை கொள்ள சொல்லி அரசிடம் கூறலாம் இல்லை என்றால் மன்னித்து நஷ்ட ஈடும் பெற்றுக் கொள்ளலாம் இரண்டில் எதை செய்யவும் அவளுக்கும் முழுமையான சுதந்திரம் உண்டு.

கொலையான அவருக்குப் பல வாரிசுகள் இருந்து அவர்களிடையே குற்றவாளியை கொள்வதா விடுவதா என்ற கருத்து வேறுபாடு ஏற்படுகின்றது என்று வைத்துக்கொள்வோம் கொஞ்சம்பேர் கொன்றே ஆக வேண்டும் என்கிறார்கள் ஒரு சிலரோ விட்டுவிடலாம் அதற்கு பதிலாக நஷ்ட ஈடு பெற்றுக் கொள்ளலாம் என்கிறார்கள் என்றால் கொலை செய்வது தடுத்து நிறுத்தப்படும். அப்போதும் பெண்ணுக்கு சம உரிமை வழங்கப்படும் அவளுடைய கருத்தும் ஆண்களுடைய கருத்துக்கு ஒப்பாகவே மதிக்கப்படும் பாகுபாடு காட்டப்பட மாட்டாது.

இது அல்லாத மற்ற குற்றங்களை பொறுத்தமட்டில் ஆண் பெண் என்று பாகுபாடு பார்ப்பதற்கு வழியில்லை;

திருடனோ திருடியோ அவர்கள் சம்பாதித்த பாவத்திற்கு, அல்லாஹ்விடமிருந்துள்ள தண்டனையாக அவர்களின் கரங்களைத் தரித்து விடுங்கள். அல்லாஹ் மிகைத்தவனும், ஞானம் மிக்கோனுமாக இருக்கின்றான்.
(அல்குர்ஆன் : 5:38)

திருட்டுக்கு தண்டனையாக கைகளை வெட்டுவது ஆணென்றும் பெண்ணென்றும் பாராமல் குற்றவாளி என்பதை மட்டும் கருத்தில் கொண்டு வெட்டப்படும் என்பது இவ்வசனத்திலிருந்து விளங்குகின்றது குற்றவாளி ஆணா பெண்ணா என்றெல்லாம் கவனிக்கப்படாது.

விபசாரியும், விபசாரனும் – இவ்விருவரில் ஒவ்வொருவரையும் நூறு கசையடி அடியுங்கள்; மெய்யாகவே, நீங்கள் அல்லாஹ்வின் மீதும், இறுதி நாள் மீதும் ஈமான் கொண்டவர்களாக இருந்தால். அல்லாஹ்வின் சடடத்(தை நிறைவேற்றுவ)தில், அவ்விருவர் மீதும் உங்களுக்கு இரக்கம் ஏற்பட வேண்டாம்; இன்னும் அவ்விருவரின் வேதனையையும் முஃமின்களில் ஒரு கூட்டத்தார் (நேரில்) பார்க்கட்டும்.
(அல்குர்ஆன் : 24:2)

இங்கும் ஆண் பெண் என்ற பாகுபாடு கிடையாது. கன்னித் தன்மை இழக்காத கல்யாணமாகாத ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் விபச்சாரத்தில் ஈடுபட்டால் அவருக்கு இஸ்லாமிய சட்டத்தின்படி நூறு கசையடிகள் வழங்கப்படும் கல்யாணமான ஆணுக்கும் கல்யாணம் ஆன பெண்ணுக்கும் கல்லெறி தண்டனை வழங்கப்படும் இவ்விஷயத்தில் ஆண் என்றும் பெண் என்றும் வித்தியாசம் பார்க்கப்பட மாட்டாது

இப்போது சாட்சி சட்டத்தை நாம் காண்போம் சாட்சியளிக்கும் உரிமையை இஸ்லாம் பெண்ணுக்கு வழங்கியுள்ளது ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள் இவ்வுரிமையை இஸ்லாம் பெண்ணுக்கு 1441 ஆண்டுகளுக்கு முன்னாலேயே வழங்கியுள்ளது.

யூத மத குருமார்கள் ஆன ‘ரப்பிகள்’ இருபதாம் நூற்றாண்டில் பெண்ணுக்கு சாட்சியளிக்கும் உரிமையை வழங்கலாமா? வேண்டாமா? என்று கூட்டம் போட்டு யோசித்துக் கொண்டிருந்தார்கள் ஆனால் இஸ்லாமோ இவ்வுரிமையை 1441 ஆண்டுகளுக்கு முன்பாகவே வழங்கியுள்ளது.

அத்தியாயம் அந்நூரில்…
எவர்கள் கற்புள்ள பெண்கள் மீது அவதூறு கூறி (அதை நிரூபிக்க) நான்கு சாட்சிகளைக் கொண்டு வரவில்லையோ, அவர்களை நீங்கள் எண்பது கசையடி அடியுங்கள்; பின்னர் அவர்களது சாட்சியத்தை எக்காலத்திலும் ஏற்றுக் கொள்ளாதீர்கள் – நிச்சயமாக அவர்கள்தான் தீயவர்கள்.
(அல்குர்ஆன் : 24:4)

சாதாரணமானது ஒரு குற்றத்திற்கு இரண்டு சாட்சிகள் போதுமானது ஆனால் பெரியதொரு குற்றத்திற்கு நான்கு சாட்சிகள் வரை வேண்டும். பெண்கள் மீதான அவதூறு குற்றத்திற்கு நான்கு சாட்சிகள் கண்டிப்பாக வேண்டும் என்று இஸ்லாம் சொல்கின்றது ஏதேனும் ஒரு அப்பாவி பெண் மீது போகிறபோக்கில் அவதூறு குற்றச்சாட்டை அள்ளி வீசிவிட்டு அவ்வளவு எளிதாக சென்றுவிட முடியாது நான்கு சாட்சிகளைக் கொண்டு வந்து நிறுத்தி ஆக வேண்டும் இல்லை என்றால் இஸ்லாமிய சட்டம் உங்களை விட்டு வைக்காது.

இன்றைக்கு நல்ல கருப்பு நிலை வழுவாத பெண்டிர் மீது நினைத்தவன் எல்லாம் இஷ்டத்துக்கு அவதூறை அள்ளி வீசுவதை காணமுடிகின்றது பெண்களுடைய கற்பைப் பற்றியும் மானத்தைப் பற்றியும் மனம் போன போக்கில் குற்றம் சுமத்துவதை ன சம்பந்தமே இல்லாமல் கண்டவர்களோடு வெகுளிப் பெண்களை தொடர்புபடுத்திப் பேசுவதையும் அதை கண் காது வைத்து மக்களிடையேயும் பரப்புவதிலும் காண்கிறோம். இஸ்லாமிய ஆட்சியில் இது போன்ற செயலை நீங்கள் செய்தால் நான்கு சாட்சிகளைக் கொண்டு வந்து நீதிமன்றத்தில் நிறுத்தியாக வேண்டும் அவ்வாறு உங்களால் சாட்சிகளைக் கொண்டு வந்து நிறுத்த முடியவில்லை என்றால் உங்களுக்கு எண்பது கசையடிகள் தண்டனையாக வழங்கப்படும் அதுமட்டுமல்ல இனி எக்காலத்திலும் நீங்கள் கூறுவதை ஒப்புக் கொள்ளாது காதுகொடுத்து கேட்காது. அந்த நான்கு சாட்சிகளில் எவனாவது ஒருவன் ஒழுங்காக சாட்சி அளிக்காவிட்டாலும் நான்கு பேருக்கும் தண்டனை கொடுக்கப்படும்.

பெண்களுடைய மானம் மரியாதைக்கு இஸ்லாம் எந்தளவு முக்கியத்துவம் கொடுக்கின்றது என்பதை இதிலிருந்து விளங்கிக் கொள்ளலாம் பொதுவாக உள்ள நடைமுறையின்படி கல்யாணம் ஆனதும் பெண்கள் தங்கள் பெயர்களோடு தங்களுடைய கணவர்களின் பெயர்களை எழுதிக் கொள்வார்கள். இதனை இஸ்லாம் தடை செய்கின்றது, அதாவது விரும்பினால் அவள் தன்னுடைய கணவன் பெயரை எழுதிக் கொள்ளலாம் விரும்பினால் தன்னுடைய தந்தையின் பெயரை எழுதிக் கொள்ளலாம் என்று அவளுடைய விருப்பத்திற்கே விட்டுவிடுகிறது இஸ்லாமிய நாடுகளில் முஸ்லிம் பெண்கள் கல்யாணம் ஆன பிறகும் தமது பெயர்களோடு தமது தந்தையின் பெயரையே சூட்டி உள்ளதை இன்றும் நாம் காணலாம் பெண்களுக்கு இஸ்லாம் சம உரிமையை வழங்கியுள்ளது அதற்கு இதுவும் ஒரு உதாரணம்.
பெண்களுக்கு இஸ்லாம் வழங்கியுள்ள கல்வித்துறை உரிமைகளை பற்றி இங்கு பார்ப்போம். அல் குர்ஆனில் 96 அத்தியாயத்தில் முதல் ஐந்து வசனங்கள் தான் திருக்குர்ஆனில் முதன் முதலில் இறக்கப்பட்ட வசனங்கள், அவ்வசனங்களில் இறைவன் என்ன சொல்கிறேன் என்றால்…

“படைத்த உம்இறைவனின் பெயரைக்கொண்டு ஓதுவீராக! ஒரு தொங்கு சதையிலிருந்து அவனே மனிதனை படைத்தான் ஓதுவீராக! உமிறைவன் கண்ணியமிக்கவன்; அவனே எழுது கோலைக் கொண்டு எழுத்தறிவித்தான். மனிதனுக்கு தெரியாததை எல்லாம் கற்றுக் கொடுத்தான்” (அல்குர்ஆன் 96: 1-5)

இங்கு ஒரு விஷயத்தை மறந்து விடாதீர்கள், 1500 ஆண்டுகளுக்கு முன்னால் நடந்ததை பற்றி நாம் பேசிக்கொண்டுள்ளோம், அக்காலத்தில் பெண்களுக்கு எந்த உரிமையும் கிடையாது ஏதோ சொத்துபத்துகளை போன்று பெண்கள் கருதப்பட்டார்கள் பெண்களுக்கு எழுத்தறிவு பற்றி உலகம் கனவு கூட காணாத காலத்தில் இஸ்லாம், பெண்கள் கல்வி கற்றே ஆக வேண்டும் என வலியுறுத்தியுள்ளது

ஏற்கனவே சொல்லப்பட்டது போல கற்றுத் தேர்ந்த பல பெண்களை சஹாபாக்களில் நாம் பார்க்கலாம். அவர்களின் முதலிடத்தை அன்னை ஆயிஷா (ரலி) வகிக்கிறார்கள் இஸ்லாமிய ஆட்சியாளரான அபூபக்கரின் மகள்; இறை நம்பிக்கையாளர்களின் அன்னை எனும் சிறப்புக்குரியவர் உயர்திரு நபித்தோழர்களும் இஸ்லாமிய ஆட்சி கடிவாளத்தை கையில் ஏந்திய கலீபாக்களும் கூட அன்னை ஆயிஷா அவரை அணுகி வழிகாட்டுதலை பெற்றுள்ளார்கள்.

அன்னை ஆயிஷாவின் முதன்மை சீடராக விளங்கியவர் உர்வா ரலியல்லாஹு அன்ஹு ஆவார். அவர் கூறுவதாவது:
“திருக்குர்ஆன் விரிவுரை, வாரிசுரிமை சட்டங்கள், ஹலால்-ஹராம் அரபு இலக்கியம், அரபுக் கவிதைகள், வரலாறு போன்ற துறைகளில் ஆயிஷா அவர்களை விட புலமை பெற்றவராக யாரையும் நான் கண்டதில்லை”

இஸ்லாமிய சமய நெறியில் மற்றும் அவர் புலமைப் பெற்றிருக்கவில்லை அத்தோடு மருத்துவம் போன்ற உலக அறிவிலும் சிறந்து விளங்கினார் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களைச் சந்தித்து உரையாட வெளியூர்களிலிருந்து தூதுக் குழுக்கள் வரும்போது அவர்களிடையே நிகழும் உரையாடல்களை கவனமுடன் கேட்டு மனதில் பதிய வைத்துக் கொள்வார்.

கணிதத் துறையில் அவருக்கு அளவற்ற ஆர்வம் இருந்தது. நபித்தோழர்களுக்கு வாரிசுரிமை பங்கீட்டில் ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால் ஆயிஷாவிடம் வந்துதான் தமது ஐயங்களை தீர்த்துக் கொள்வார்கள் இம்மாதிரி பல முறை நடந்து இருக்கின்றது ஷரீஅத் அடிப்படையில் ஒவ்வொரு வாரிசும் எவ்வளவு பங்கு கிடைக்கும் என்பதை கணித்துக் கூறுவது ஆயிஷா (ரழி) நிகரற்று விளங்கினார்.

மற்ற நபித்தோழர்களைப் போலவே ஆட்சி கடிவாளத்தை கையில் ஏந்தியிருந்த நான்கு கலிப்பாக்களுக்கும் அவ்வப்போது ஆலோசனை வழங்கும் வாய்ப்பும் ஆயிஷா (ரழி) கிடைத்தது அவர் பலமுறை நபித்தோழர் அபூஹுரைராவுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். ஏறத்தாழ 2210 நபிமொழியை ஆயிஷா (ரழி) அறிவித்துள்ளார்.

நபித்தோழர் அபூமூஸா அஷ் அரி (ரழி) மிகப்பெரிய அறிஞர். “நபித்தோழர்களான எங்களுக்கு ஏதேனும் ஒரு பிரச்சினையில் சரியான தீர்வு கிடைக்காவிட்டால் ஆயிஷாவிடம் சென்று ஆலோசனை கேட்போம் அவர் எங்களுக்கு சரியான விஷயத்தை சுட்டிக்காட்டுவார்” எனக் கூறுகிறார்.

குறைந்தபட்சம் 88 மார்க்க அறிஞர்கள் ஆயிஷாவிடம் பயின்றுள்ளார்கள் அப்படி எனில் ஆயிஷா அவர்களை “ஆசிரியர்களின் ஆசிரியர்” என்று அழைத்தாலும் மிகையாகாது.

அன்னை ஆயிஷாவை தவிர மற்ற ஸஹாபிகளான பெண்மணிகளும் கல்வியில் சிறந்து விளங்கியுள்ளமையை வரலாற்றின் நம்மால் காணமுடிகின்றது

அன்னை ஸஃபியா அவர்களுக்கு இஸ்லாமிய மார்க்க ஞானத்தில் பெரும் புலமை இருந்தது அவர்களுடைய காலத்தில் மிகச் சிறந்த மார்க்க அறிவு பெற்ற பெண்மணியாக அவர் விளங்கினார் என்று அவரைப் பற்றி இமாம் நவவீ குறிப்பிடுகிறார்

இவர்களைப்போன்றே கல்வியிலும் கேள்வியிழும் சிறந்து விளங்கிய இன்னொருவர் அன்னை உம்மு ஸலமா (ரழி) ஆவார். அவரிடம் மட்டும் 32 மார்க்க அறிஞர்கள் மாணவர்களாக பயின்றுள்ளனர் என்ன அல்லாமா இப்னு ஹஜர் ரஹ்மத்துல்லாஹி குறிப்பிடுகிறார்.

ஃபாத்திமா பின்த் கைஸ் (ரழி) அவர்களைப் பற்றியும் வரலாற்றில் ஒரு குறிப்பு காணக் கிடைக்கின்றது ஒருமுறை ஏதோ ஒரு பிரச்சினையில் அவருக்கும் ஆயிஷா (ரழி) மற்றும் உமர் (ரழி) அவர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது நாள் முழுக்க விளக்கியும் பாத்திமாவை ஒப்புக்கொள்ள வைக்க அவர்கள் இருவராலும் இயலவில்லை.

புலம்பெயர்ந்து சென்ற தொடக்ககால முஹாஜிர்களில் பாத்திமாவும் ஒருவர் விசாலமான அறிவு பார்வை உடையவர் என அவரைப் பற்றி இமாம் நவவி கூறியுள்ளார்.

அனஸ் அவர்களின் தாயான உம்மு சுலைம் அவர்களும் மிகப்பெரும் அறிஞராக விளங்கினார் இறைவனின் பக்கம் மக்களை அழைக்கும் தாவா பணியில் அவருக்கு மிகுந்த ஈடுபாடு இருந்தது.

ஹஸன் (ரழி) அவர்களுடைய பேத்தியான ஸஈதா நஃப்ஸியா ரஹிமஹுல்லாஹ் அவர்களிடம் கூட இமாம் ஷாபி மாணவராக இருந்து கல்வி கற்றார் இஸ்லாமிய மார்க்க அறிவில் தலைசிறந்த முன்னோடியாக திகழ்ந்தவர் இமாம் ஷாபி அவர்கள் உலகில் பின்பற்றப்படும் நான்கு இஸ்லாமிய வழிபாட்டைகளில் அவருடையதும் பிரதானமானதொன்று.

இவர்களை போன்று இன்னும் பல ஸஹாபியப் பெண்மணிகள் வரலாற்றில் மின்னுவதை பார்க்க முடியும் உதாரணமாக உம்மு தர்தா (ரழி), அபுத் தர்தாவின் மனைவியான இவர் அறிவார்ந்த கருத்துக்களை அழகாக வெளிப்படுத்துவதில் சிறந்து விளங்கினார்.

இமாம் புகாரி போன்றோரே அவருடைய அறிவை வியந்து பாராட்டியுள்ளனர்

இது போன்ற எண்ணற்ற உதாரணங்களை கூறமுடியும் பெண்கள் படு மோசமாக நடத்தப்பட்ட ஒரு காலகட்டம் அது என்பதை மறந்துவிட வேண்டாம் வீட்டில் பெண் குழந்தை பிறந்தால் உயிரோடு குழிதோண்டிப் புதைத்து வந்த காலகட்டம் அது முஸ்லிம் பெண்கள் அக்காலகட்டத்தில் இஸ்லாமிய அறிவில் மட்டுமல்லாது மருத்துவம் விஞ்ஞானம் போன்ற துறைகளிலும் தமது சுவடுகளை பதித்து உள்ளதையும் காண முடிகின்றது.

பெண்கள் கட்டாயம் கல்வி கற்க வேண்டும் என இஸ்லாம் வலியுறுத்தியது தான் இதற்கெல்லாம் ஒரே காரணம் இதைப்பற்றி நீங்கள் என்னதான் கருதுகிறீர்கள்?

Leave a Response