இறைவனை கண்ணால் பார்த்து தான் நம்ப வேண்டுமா ?

படைத்தவனை அறிய
பகுத்தறிவே துணை
கண்கள் தேவையில்லை????

இறைவனை மறுப்பவர்கள் இறைவனை மறுக்க எடுத்து வைக்கும் வாதங்களில் ஒன்று தான்..

இறைவனை கண்ணால்
பார்த்தீர்களா ❓❔

பார்த்தால் காட்டுங்கள்
நாங்கள் நம்புகின்றோம் என்பார்கள் கண்ணால் பார்த்து ஒன்று உள்ளது என்பதை அறிய ஆடு மாடுகளுக்கும் கூட முடியும் அதற்க்கு எதுக்கு நமக்கு பகுத்தறிவு?

இறைவனை ஆழமாய் நம்புகின்ற மனிதர்களில் பலர்
இதற்க்கு பதில் இல்லாமல் தடுமாறுவதைப் பார்க்கின்றோம்

காரணம் இறைவனை இருப்பதாக நம்புபவர்களும் இறைவனை கண்ணால் பார்ததில்லை

பார்ததாக சொல்பவர்களும் உண்மைக்கு மாற்றமான
கருத்தையே சொல்கின்றனர்

ஒரு மனிதன் தனக்கு தந்தை இல்லை என்று சொல்வதும் குற்றம்

எனக்கு பல தந்தை உள்ளார் என்று வாதிப்பதும் குற்றம்

இது போலவே தான்

பல இறைவன் இருப்பதாக
நினைப்பதும் குற்றம்

இறைவனே இல்லை என்று
கருதுவதும் குற்றம்

கண்களால் பார்ப்பது உண்மையாகவும் இருக்கலாம்

♨அதே கண்கள் பொய்யான ஒன்றை உண்மையாகவும் சில நேரம் காட்டலாம்

இது கண்ணில் உள்ள கோளாறு இல்லை
மனிதக் கண்களின் ஆற்றல் அவ்வளவுதான்

அதனால் தான்

வானில் தெரியும் கோள்கள் நட்சத்திரங்கள் யாவற்றையும் நமது கண்கள் சிறியதாகவே காட்டுகின்றது.ஆனால் நாம் வாழும் பூமியை விட பல மடங்கு பிரமாண்டமானவையே பெரும்பாலான கோள்கள் . நம்மை சுற்றி கோடிக்கணக்கான
உயிரணுக்கள் பறக்கின்றது. ஆனால் நம் கண்களோ அப்படி ஒன்று இருப்பதாகவே காட்டுவதில்லை

நீங்கள் நன்றாக சிந்தித்துப்
பாருங்கள்

கண்களால் பார்ப்பது தான் உண்மை என்றால் இது போன்ற விசயங்களில் கண்கள் சரியான விடை சொல்லாதது ஏன் ? எனவே அறிய வேண்டிய விசயம் என்னவென்றால் கண்களால் பார்த்தால் தான் இறைவனை நம்ப முடியும் என்பது அறிவார்தமான முடிவில்லை

கண்களால் பார்த்து முடிவு செய்வதில் எது சாத்தியமோ அவைகளை மட்டுமே கண்களை கொண்டு அறிய முயற்சிக்க வேண்டும்

இறைவனை இருப்பதாக அறிந்து
கொள்வதற்க்கு கண்கள் சரியான அளவுகோள் இல்லை

கண்களால் நேரடியாக காண முடியாதவைகளை மனிதன் தனது பகுதறிவால் தான் கண்டு பிடித்தான்
அந்த பகுத்தறிவை கொண்டு அண்ட சராசரங்களை இன்னும் பிற அம்சங்களை முறையாக ஆய்வு செய்யுங்கள் அப்போது உங்கள் சிந்தனை பிறக்கும் . அந்த சிந்தனையின் பின்னே இறைவனே தோன்றுவான்.

Leave a Response