மாநபி பற்றி மாமேதைகள்

மாநபி பற்றி மாமேதைகள் 

யார் இந்த முஹம்மத் இவர் அப்படி என்ன விஷயங்களை செய்தார் 
தன்னை இறைவனின் தூதர் என்று சொன்னார் இறைவனின் வார்த்தைகள் தான் குர்ஆண் என்று சொன்னார்: இவரின் வார்த்தைகள் ஒரு துளியும் குர்ஆனில் இல்லை என்று சொன்னார், மேலும் அவருக்கு எந்த சிலையும் வைக்க வேண்டாம் என்று சொன்னார் இது எல்லாம் எதற்கு சொன்னார் அவர் பணம் பதவி தேவை என்றால் இதெல்லாம் சொல்லி இருக்க வேண்டுமே ???? இப்படி இந்த விஷயங்களை சிந்தித்த அறிஞர்கள் கீழே நபிகள் நாயகத்தை பற்றி சொல்லி இருகின்றனர் 
காந்திஜி –யுங் இந்திய இதழின் 

நபிகள் நாயகம் பெரிய தீர்கதரிசி: அவர்கள் அன்று அனுபவித்த துன்பங்களை நான் படித்த காலை கண்ணிர் உகுந்தேன், நீங்கள் இஸ்லாமிய ஆட்சியாளர்கள் [கலிபாக்கள் ] ஆன அபூபக்கர்,உமர் ஆகியோரின் ஆட்சி முறையை பின்பற்றி,நம்நாட்டு ஆட்சியை அமைத்துக் கொள்ளுங்கள்.

விவேகானந்தர் –ஞனதிபம் நுற்றாண்டு விலாப்பதிப்பு 

மற்றைய இனத்தார்களை காட்டிலும் முகமதியர்கள் சிறப்புற்று இருகின்றார்கள், இனப்பற்று,வர்ணபற்று முதலியவற்றை பொருட்படுத்தாமல் அவர்கள் காட்டுகின்ற சமதுவத்திலேதான் அவர்களுடைய சிறப்பு விற்றிருக்கிறது.

ஜவஹர்லால் நேரு 

முஹம்மது நபியின் வெற்றிக்கு முதலாவது காரணம் அவர்கள் கொண்டிருந்த உறுதியும் உக்கமும் [இத்தகைய உறுதி அன்றைய சூழ்நிலையில் ஏற்படுவது எளிதன்று] இரண்டாவது காரணம் இஸ்லாம் போதிக்கும் சமத்துவமும், சகோதரத்துவமும்.

நேதாஜி எழுதிய உலக வரலாறு 

சர்வதிகார மன்னர்களுக்கும் மார்க்க அழைப்பை மாநபி அவர்கள் விடுத்த தைரியத்தை பாராட்டாமல் இருக்க முடியாது.

டாக்டர் ராதாகிருஷ்ணன் -நூல் மதத்தின் மேற்கும் கிழக்கும் 

மனிதர்கள் யாவரும் ஏக சகோதர்களே என்று தத்துவம் தன்னகத்தே கொண்டது இஸ்லாம், இது பகுத்தறிவுக்குப் பொருத்தமான மதம் இஸ்லாத்தைக் கொண்டு ஹிந்து மதம் போதுமான அளவுக்கு கற்றுக் கொள்ளத் தவறிவிட்டது.

அறிஞர் அண்ணாதுரை [தமது ஒரு கட்டுரையில்] 

கண் முடிப் பழக்கங்களை மண் முடுச் செய்து, காட்டு மிராண்டிதன்மையினரை உயர்ந்த சமுதாயமாய் உருவாக்கி,நெருக்கடியான வேலைகளிலும் இலட்சியங்களை நிறை வேற்றத் தவறாத கடமை வீரர் நபிகள் நாயகம்.

டாக்டர் அம்பத்கர் 

பிறப்பால் உயர்வு தாழ்வு போக்கி,மனிதனை மனிதனாக வாழச் செய்து,சமுதாயக் கூட்டுறவு என்ற அடிப்படையின் மீது மக்களை வாழ்விக்க ஒரு நிரந்தர நெறிமுறையை வகுத்துத் தந்த வீரர் முஹம்மதைப் புகழ என்னிடம் வார்த்தைகள் போதாது.

தந்தை பெரியார் 

இஸ்லாம் ஏற்பட்டது எதற்கு என்றால் ? பல கடவுள் கொள்கை,மக்கள் பிறவி பேதைக்கொள்கை ஆகியவைகளை ஒழித்து ஒரு கடவுள்,ஒரு சமுகம் என்று மக்களுக்கு உணர்த்தி , முட நம்பிக்கை விக்கிரக வணக்கத்தை ஒழித்து பகுத்தறிவுக்கு இணங்கவும் ஏற்பட்டதாகும்.

லாலா லஜபதிராய் 
நபிகள் நாயகத்திடம் மிக மரியாதை கொண்டுள்ளேன் என்பதை வெளியிடுவதில் எனக்கு ஒருவிததிகைப்பும் இல்லை,போதகர்களுள் அவர்கள் மிக உன்னத இடத்தைத் பெற்றுள்ளார்கள் என்பது என் கருத்து.

டாக்டர் கலைஞர் கருணாநிதி 

செந்தமிழை குளிராகவும், சினக்கொண்டு சீறிவரும் பகையைக் குனக்கொண்டு நட்பாகவும் மாற்ற வல்ல மனவலிமை மிக்க மேலாளர் நபிகள் நாயகம்.

திரு கா அப்பாதுரை 

உலகளாவிய புகழ் பெற்றவருள் முன்னணி முதலிடம் நபிகள் நாயகம் என்பதில் ஐயமில்லை,உண்மையில் அவர் அளவு உலகையே மாற்றி அமைத்த இன்னொரு வரைக் கூற முடியாது.

மாவீரன் நெப்போலியன் 

எல்லா நாடுகளிலுமுள்ள அறிவாளிகள் படித்த மனிதர்களையும் ஒன்றாக சேர்த்து குர்ஆனின் கொள்கைக்கு இணங்க ஒரே விதமான ஆட்சியை நிறுவக்கூடிய காலம் அதிக தூரத்தில் இல்லை, 

அன்னி பெசன்ட் அம்மையார் 

கிறிஸ்தவ பெண்களைவிட முஸ்லிம் பெண்களே அதிக சுதந்திரமாக இருகின்றார்கள் என்பது எனது கருத்து.

சரோஜினி தேவி [கட்டுரை தொகுப்பு ]
நவீன உலகத்தில் உண்மை ஜனநாயக அரசியலை இஸ்லாம் நிலை நாட்டி விட்டது, உலக மதங்களுக்கெல்லாம் பின்னல் பிறந்தது, ஆனாலும் பிறமதங்களைக் காட்டிலும் அதிக பெருமைவாய்ந்தது.

-குருநானக்

வேதாகம,இதிகாச,புராணங்களின் காலங்கள் மலையேறி விட்டன. ஆனால் திருக்குர்ஆன் இப்போதும் உலகத்துக்கு வழி காட்டியாயிருகிறது. உலகச் சிரமைப்புக்குப் பாடுபட்ட அண்ணல் நபிகளிடம் நான் கொண்டிருக்கும் மட்டற்ற மரியாதையின் காரணமாக,இருமுறை அரேபியாவுக்குச் சென்று வரும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது . 

-மதுரை ஆதினம் [ ”யுனிக்” ரமலான் சிறப்பு மலர் 2002]

குர்ஆண் என்ற சொல்லுக்கு ஓதப் பெற்றது ,ஓத வேண்டியது ,ஒதுக்கூடியது என்பது பொருளாகும் 
நாயகம் அவர்களுக்கு சஹாபாக்கள் இருந்த காரணத்தினால் பல்வேறு விஷயங்களை குறித்து கேள்விகளை எழுப்பினார்கள்,விவாதம் செய்தார்கள்,அதே வேளையில் நாயகம் அவர்கள் சொன்ன முடிவுரையை ஏற்றுக் கொண்டார்கள் எனவே தான் அங்கே இறை நிராகரிப்புக்கு இடமில்லாமல் போய்விட்டது.

வல்லிகண்ணன் – யுனிக் -ரமலான் சிறப்பு மலர் 

மதம் கடந்த மனிதநேயத்தைப் போற்றும் பண்புடையவர்கள் முஸ்லிம்களின் எண்ணற்றவர்கள் உளர் .

லாமார்டின் – HISTORIC DE LA TURQUE PARIS 1854 VOLUME 2.PAGE 276-277

ஓர் உயர்ந்த மனிதனுடைய சிறப்புகளை எந்த குணநலன்களை அளவுகோலாகக் கொண்டு கணித்தாலும் சரி,இந்த உயர்ந்த மனிதரை மிஞ்சுவோர் இவ்வையகத்தில் எவரேனும் உண்டா ?

-கோட்லி வில்லியம் லியுட்ஸ்

உயர்தர கலாச்சாரத்தையும், நாகரிகத்தையும் உலக மக்கள் அடைய வேண்டுமாயின் முஹம்மது நபியின் கொள்கையையும் குறிக்கோல்களையும் அப்படியே தழுவ வேண்டும். 

வாஷிங்டன் இர்விங் நூல் : முஹம்மத்

இறுதி முச்சுவரை ஏகத்துவத்தை பற்றி பிராச்சாரம் செய்து அசைக்க முடியாத இறை நம்பிகையுடன் இருந்து, தாமே இறைவனின் தீர்க்கதரிசி என்று உள்ளனர்வுடன் உரிமை கொண்டாடிய முஹம்மது நபி ஸல் அவர்களது நபித்துவத்தை எவர் மறுக்க முடியும் ?

நபிகள் நாயகத்தை பற்றி ஹிந்து மத வேதங்களில் 

நபிகள் நாயகம் வருவார் என்று ஹிந்து மத வேதங்களில் முன்னறிவுப்பு செய்யப்பட்டுள்ளது அவை 
அதர்வண வேதம் புத்தகம் 20 வேதவரி 127 மந்திரம் 1-4
அவர்தான் நரஷன்ஷா ஆவர் [சமஸ்கிரத்தில் நரஷன்ஷா என்று உள்ளது இதற்கு தமிழ் அர்த்தம் புகழப்பட்டவர் என்று பொருள் அதற்கு அரபியில் முஹம்மத் என்று பொருள் ]

மேலும் பல முன்னரிவுப்புகள் ஆதாரத்தை மற்றும் இங்கு போடுகின்றேன் 

ரிக் வேதம் புத்தகம்=1, வேதவரி=13,மந்திரம்=3 
ரிக் வேதம் புத்தகம்=1, வேதவரி=18,மந்திரம்=9 
ரிக் வேதம் புத்தகம்1, வேதவரி=106,மந்திரம்=4 
ரிக் வேதம் புத்தகம்=2, வேதவரி=3,மந்திரம்=2
ரிக் வேதம் புத்தகம்=10, வேதவரி=64,மந்திரம்=3 

நபிகள் நாயகத்தை பற்றி பைபிளில் 

முஹம்மது நபி வருவார் அவர் வந்த பிறகு நாம் அவரை பின்பற்ற வேண்டும் என்று பைபளில் சொல்லப்பட்டுள்ளது 
உபாகமம் 18:18:19
ஏசாயா புத்தகத்தில் 29:12
உன்னதப் பாட்டு 5:16
யோவான் சுவிசேஷம் 16:12-14
இன்னும் அநேக காரியங்களை நான் உங்களுக்கு சொல்ல வேண்டியுள்ளது அவற்றை நீங்கள் இப்பொழுது தாங்க மாட்டிர்கள் சத்திய ஆவியாக அவர் வரும்பொழுது,சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார்,அவர் தாமே சுயமாய் பேசாமல் தாம் கேள்விப்பட்டவைகளை உங்களுக்கு அறிவிப்பார் 

நபிகள் நாயகத்தை பற்றி குர்ஆனில் 

சூரா அந்நிஸா 4:165 சூரா அல்முஹ்மினின் 40:78
நபியே உமக்கு முன்னர் தூதர்கள் பலரை திட்டமாக நாம் அனுபியுள்ளோம், அவர்களிடமிருந்து சிலரின் வரலாற்றை நாம் உமக்குக் கூறவில்லை.

Leave a Response