திருக்குர்ஆன் கூறும் அறிவியல் கண்டு பிடிப்புகள்
பெருவெடிப்புக் கொள்கை(Big-Bang Theory)
இந்த உலகம் எவ்வாறு படைக்கப்பட்டது என்பது பற்றி பலவிதமான கட்டுக் கதைகளைத் தான்
முந்திய நூல்கள் கூறுகின்றன…
ஏன் இன்றும்கூட பலபேர் உலகம் எவ்வாறு உருவானது என்பதில் குழப்பமாகவும் சந்தேகமாகவும் இருந்து கொண்டு தான் இருக்கிறார்கள்.
ஆனால் எந்த குழப்பமும் இல்லாமல் மிக தெளிவாக குரான் மட்டுமே கூறுகிறது
பெரு வெடிப்புக் கோட்பாடு (Big-Bang Theory) என்பது அண்டம் எவ்வாறு தோன்றியது என்பது பற்றி விளக்க முயலும் ஒரு கோட்பாட.
பெரு வெடிப்புக் கோட்பாடானது 20 ஆம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் வெளியான இரண்டு முக்கிய கண்டுபிடிப்புக்களின் அடிப்படையில் உருவானது.
ஒன்று ஐன்ஸ்டீனுடைய பொதுச் சார்புக் கோட்பாடு (General Theory of
Relativity). மற்றது அண்டவியற் கொள்கை (Cosmological
Principle). பொதுச் சார்புக் கோட்பாடு
பெரு வெடிப்புக் கொள்கையின்படி அண்ட வெளியில் உள்ள பொருட்கள் அனைத்தும் 14 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் மிக அதிகமான அடர்த்தியுடன் கூடிய, சிறிய அளவினதான தீப்பிழம்பாக இருந்திருக்கிறது.
இன்று நம்மால் அறியப்படுகின்ற அண்டத்திலுள்ள பொருட்கள் அனைத்தும் சில மில்லி மீட்டர்கள் அளவுக்குள் அடங்கியிருந்திருக்கும் எனக் கணிப்பிடப்படுகின்றது.
[மேலதிக விபரம் அறிய இணையத்தில் காணுங்கள்]
இது விஞ்ஞானிகளின் வாதம்
20ம் நூற்றாண்டில் கண்டுபிடித்ததை கிபி 7ம் நூற்றாண்டில் எப்படி சொல்லி இருக்க முடியும் ???
21:30 اَوَلَمْ يَرَ الَّذِيْنَ كَفَرُوْۤا اَنَّ السَّمٰوٰتِ
وَالْاَرْضَ كَانَـتَا رَتْقًا فَفَتَقْنٰهُمَا ؕ وَجَعَلْنَا مِنَ الْمَآءِ كُلَّ
شَىْءٍ حَىٍّ ؕ اَفَلَا يُؤْمِنُوْنَ
வானங்களும், பூமியும் இணைந்திருந்தன என்பதையும், அவ்விரண்டையும் நாமே பிரித்தோம் என்பதையும், உயிருள்ள ஒவ்வொரு பொருளையும் தண்ணீரிலிருந்து அமைத்தோம் என்பதையும் (நம்மை) மறுப்போர் சிந்திக்க வேண்டாமா? அவர்கள் நம்பிக்கை கொள்ள வேண்டாமா?
திருக்குர்ஆன் 21:30
இங்கு கவனிக்க படவேண்டிய வார்த்தை
நிச்சயமாக வானங்களும், பூமியும் (முதலில்) இணைந்திருந்தன என்பதையும், இவற்றை நாமே பிரித்(தமைத்)தோம் என்பதையும்,
வானம் பூமி எல்லாம் ஒரே பொருளாக இருந்தன. அவற்றை நாம் தான் பிரித்துப் பிளந்து எடுத்தோம் என்று அல்லாஹ் கூறுகிறான்.
இதைத் தான் இன்றைய அறிவியல் உலகமும் சொல்கிறது. இந்தப் பேருண்மை 1400 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஒரு மனிதருக்கு எப்படித் தெரியும்? படைத்த இறைவனின் வார்த்தையாக திருக்குர்ஆன் இருந்தால் மாத்திரமே இதைக் கூற முடியும்.
இவ்வாறு பிளக்கப்பட்ட பின் முதலில் தூசுப் படலம் உருவானது. பின்னர் அந்தத் தூசுப் படலங்கள் ஆங்காங்கே திரண்டு கோள்கள் உருவாயின என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
இதையும் திருக்குர்ஆன் தெளிவாகக் கூறுகின்றது.
41:11 ثُمَّ اسْتَـوٰۤى اِلَى السَّمَآءِ وَهِىَ دُخَانٌ
فَقَالَ لَهَا وَلِلْاَرْضِ ائْتِيَا طَوْعًا اَوْ كَرْهًا ؕ قَالَتَاۤ اَتَيْنَا طَآٮِٕعِيْنَ
பின்னர் வானம் புகையாக இருந்த போது அதை நாடினான். ‘விரும்பியோ, விரும்பாமலோ நீங்கள் கட்டுப்பட்டு நடக்க வேண்டும்’ என்று அதற்கும், பூமிக்கும் கூறினான். ‘விரும்பியே கட்டுப்பட்டோம்’ என்று அவை கூறின.
திருக்குர்ஆன் 41:11
இவ்வசனத்தில் வானம் புகையாக இருந்ததாகக் கூறப்படுகிறது.
இவ்வாறு பிரித்தெடுக்கப்பட்ட பின் வானம் புகை மூட்டமாக இருந்து அதன் பிறகு தான் ஒவ்வொரு கோள்களும் உருவாயின என்று இப்போது விஞ்ஞானிகள் கூறுவதை 14 நூற்றாண்டுகளுக்கு முன் திருக்குர்ஆன் கூறி இது இறை வேதம் தான் என்பதைச் சந்தேகமற நிரூபிக்கிறது.