கேள்வி:பிரச்சனைகள்
உருவாவதே
கடவுளின்
பெயரால்
தானே
பின்பு
இஸ்லாம்
எப்புடி
தீர்வாகும்???
பதில் :சண்டைகள் கடவுளின் பெயரால் தான் நடைபெறுகிறது என்பது உண்மை ஆனால் இறைவனின் பெயரால் மட்டும் சண்டைகள் நடைபெறவில்லை,
உதாரனமாக :மொழி பெயரால் சண்டை நடக்கிறது இதற்கு கடவுட் கொள்கை காரணமல்ல கடவுள் கொள்கை இல்லாத கம்யுனிஸ்டுகளுக்கு மத்தியிலும் இடதுசாரி கம்யுனிஸ்ட் ,வலது சாரி கம்யுனிஸ்ட் என சண்டை நடக்கிறது .எனவே சண்டைக்குக் காரணம் மனிதரின் வக்கிர புத்தியை தவிர கடவுள் கொள்கை அல்ல
சண்டை சச்சரவுகளுக்கு மனிதன் கடவுள் கொள்கையைக் காரணம் காட்டுகின்றான், மொழியைக் காரணம் காட்டுகின்றான் இவனிடம் குடிபுகுந்துள்ள வக்கிர புத்தியை கூறுவதில்லை. எனவே சண்டை போடுகின்றவன் எதை வைத்தாவது சண்டை போட்டுக் கொண்டே இருப்பான் இதை ஒழிக்க முடியாது.
சகோதரரின் கேள்வியின் முக்கியைப் பகுதி என்னவென்றால் இவ்வளவும் நடக்கும் போது கடவுள் ஏன் #பார்த்துக்கொண்டிருக்கிறார் என்பது தான். பள்ளிவாசலை இடுக்கிறார்கள்:
பாதியாரை எரிக்கின்றார்கள்
இப்படி எவ்வளவோ நடந்தும் பார்த்துக் கொண்டிருக்கும் அக்கடவுள் ஓரம் கட்டிவிட்டு,கடவுள் கொள்கை இல்லாத ஒரு சமுதாயத்தை உருவாக்கி எல்லாவற்றையும் இல்லாதொழித்து விடலாமே என தனது கருத்தை வெளிப்படுத்தி கேள்வி கேட்டுள்ளார்.
இரு விஷயங்களை நீங்கள் கவனிக்க வேண்டும். ஒன்று கடவுள் கொள்கை அற்ற ஒரு சமுதாயத்தை உருவாக்கிய பின் எப்பிரச்சனைளையும் இல்லாத சமுதாயமாக வாழலாம் என்பதற்கு எவ்வித உத்தரவாதமும் கிடையாது பக்குவப்பட்டு சரியாக நடக்க வேண்டுமென்று உணர்வு எல்லா மக்களுக்கும் வந்துவிடாது. கண்டிப்பாக அது முடியாத காரியமும் கூட
ஏனெனில் கடவுள் இல்லை என ஓரம் கட்டிய பின் மனிதன் எவருக்குமே பயப்பட மாட்டான். அவனவன் தத்தமது அறிவைப் பயன்படுத்தி ஒருவனுகொருவன் துரோகம் செய்ய முற்படுவான் அபகரிப்பான். ஊழல் புரிவான் இலஞ்சம் வாங்குவான், பாதங்கள் அனைத்தும் தலைவிரித்தாடும் .
மற்றொன்று, அநியாயங்களைக் கடவுள் பார்த்துக் கொண்டிருக்கிறார் என தோன்றும்
இந்த அண்டத்தை படைத்தது பற்றி கூறும் இறைவன் இது ஒரு சோதனை கூடமாகப் படைத்திருப்பதாகக் கூறுகிறான், இந்த உலகு, இதன் இன்பங்கள் போன்றவற்றிற்கு ஒரு கொசுவின் இறைக்கையளவு கூட இறைவனிடம் மதிப்பு இல்லை என இறைவன் கூறுவதாக நபிகள் நாயகம் [ஸல்] அவர்கள் கூறுகிறார்கள், எனவே தான் இறைவன் இவ்வுலகில் மனிதன் புரிகின்ற அநியாயங்களை,அட்டுழியங்களைக் கவனித்து உடனடியாகத் தண்டிக்காது, அவனுக்கு அவகாசம் வழங்கி அக்காலப் பகுதிக்குள் அவன் திருந்தி வாழ்கின்றானா? எனப் பார்க்கின்றான்.தண்டனைக்குரிய உலகம் மறு உலகு தான் .
இங்கு இருக்கும் மக்களைக் கவனியுங்கள், இவர்களில் சிலர் இதற்கு முன்னர் குற்றம் புரிந்தர்வர்களே,ஆனால் காலப்போக்கில் அவைகளைத் தவறெனப் புரிந்து கொண்டு திருந்தி வாழ ஆரம்பித்திருகின்றனர். எனவே இப்படி ஒரு அவகாசத்தை இவர்களுக்கு கொடுக்காமல் தவறு செய்து உடனேயே,இவர்களை இறைவன் அந்த இடத்திலேயே தண்டனையாக அழித்திருந்தால் இவர்கள் இந்நிலைக்கு ஆளாகி இருப்பார்களா ? எனவே குற்றத்திற்கு உடனே இறை தண்டனை என்பது பொருத்தமற்ற ஒரு செயலாகவே நமது சிந்தனைக்குப் படுகிறது.
மனிதன் இயல்பில் தவறுபுரிபவன் தான்,எனினும் அவன் தவறை நினைத்து திருந்தி வாழ முற்பட வேண்டும் என்ற கருத்தை நபிகள் நாயகம் [ஸல்] அவர்கள் சொல்லி இருகிறார்கள்,
இந்த பதிவை படிக்கும் அனைவரும் நான் எந்த தவறும் இதுவரை செய்யவில்லை எனத் துணிந்து கூறுங்கள் பார்க்கலாம் . முடியாது நிச்சயம் முடியாது உடனே தண்டிக வேண்டுமென்று விரும்பினால் நம் அனைவரையும் என்றோ அழித்திருக்க வேண்டும் அவ்வாறு நடந்திருந்தால் இப்புவியில் என்றோ மனித இனம் அழிந்திருக்கும்,ஆகவே புரிகின்ற தவறுகளுக்கு மறுமை நாளில் தண்டனை உண்டு என்ற நினைப்பு மனிதனுக்கு வந்து விடுமானால் ஒழுக்கமுள்ள வாழ்க்கையாக அவனது வாழ்வு மாறிவிடும் என்பது தான் இஸ்லாத்தின் நிலைபாடு .