பல அற்புதங்களை செய்தவரை இறைவன் இல்லை என்று சொல்வது நியாயமா? இயேசு அற்புதங்கள் செய்ததினால் இறைதன்மை பெறுவாரா? சுயமாக அற்புதம் செய்தாரா??

பல அற்புதங்களை செய்தவரை இறைவன் இல்லை என்று சொல்வது நியாயமா?

இயேசு அற்புதங்கள் செய்ததினால் இறைதன்மை பெறுவாரா? சுயமாக அற்புதம் செய்தாரா??

நான் தேவனுடைய  ஆவியினாலே பிசாசுகளைத்  துரத்துகிறபடியால், தேவனுடைய  ராஜ்யம் உங்களிடத்தில்  வந்திருக்கிறதே. [மத்தேயு Mathew 12 அதிகாரம் 28.]

நான் தேவனுடைய  விரலினாலே பிசாசுகளைத்  துரத்துகிறபடியால், தேவனுடைய  ராஜ்யம் உங்களிடத்தில்  வந்திருக்கிறதே. இறந்த லாஸரஸ்ஸை எழுப்பியப்போது என்னாவாயிற்று, தொடா்ந்து வாசிப்போம்.[லூக்கா Luke 11 அதிகாரம்  20.]

அப்பொழுது மரித்தவன் வைக்கப்பட்ட இடத்திலிருந்த கல்லை எடுத்துப்போட்டார்கள்.  இயேசு தம்முடைய கண்களை ஏறெடுத்து:பிதாவே, நீர் எனக்குச் செவிகொடுத்தபடியினால்  உம்மை ஸ்தோத்திரிக்கிறேன்.  காரணத்தை சொல்கிறார்.[யோவான் John 11 அதிகாரம்  41.]

நீர் எப்பொழுதும் எனக்குச்  செவிகொடுக்கிறீர் என்று நான் அறிந்திருக்கிறேன்;  ஆனாலும் நீர் என்னை அனுப்பினதைச்  சூழ்ந்துநிற்கும் ஜனங்கள்  விசுவாசிக்கும்படியாக அவர்கள்  நிமித்தம் இதைச் சொன்னேன்  என்றார். [யோவான் John 11 அதிகாரம்  42.]

நான் என் சுயமாய்  ஒன்றுஞ்செய்கிறதில்லை; நான்  கேட்கிறபடியே நியாயந்தீர்க்கிறேன்;எனக்குச் சித்தமானதை நான்  தேடாமல், என்னை அனுப்பின  பிதாவுக்குச் சித்தமானதையே நான்  தேடுகிறபடியால் என் தீர்ப்பு நீதியாயிருக்கிறது. [யோவான் John  5 அதிகாரம்  30.]

ஜனங்கள்  அதைக்கண்டு ஆச்சரியப்பட்டு, மனுஷருக்கு இப்படிப்பட்ட  அதிகாரத்தைக்  கொடுத்தவராகிய  தேவனை மகிமைப்படுத்தினார்கள். [மத்தேயு Mathew 9 அதிகாரம்  8.]

இஸ்ரவேலரே, நான்  சொல்லும் வார்த்தைகளைக் கேளுங்கள்; நீங்கள் அறிந்திருக்கிறபடி நசரேயனாகிய இயேசுவைத் தேவன் உங்களுக்குள்ளே பலத்த செய்கைகளையும், அற்புதங்களையும், அடையாளங்களையும் நடப்பித்து, அவைகளினாலே அவரை உங்களுக்கு வெளிப்படுத்தினார். [அப்போஸ்தலர் Acts  2 அதிகாரம்  22. ]

முற்காலத்தில்  மக்கள் கடவுளை விசுவாசிக்கும்பொருட்டு தனது தூதா்களுக்கு அற்புதங்கள்  செய்யவைத்து  முழுமையாக உதவினார்,  அற்புதங்கள்  செய்ததினால் எவரும்  கடவுள் ஆகமுடியாது .. பைபிள்  படி  கள்ளத்தீா்க்கதாிசிகலும் அற்புதங்கள்  செய்வார்கள், அதனால்  அவா் கடவுளாக முடியுமா?? 

ஏனெனில்,கள்ளக்கிறிஸ்துக்களும் கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பி,  கூடுமானால்  தெரிந்துகொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கத்தக்கதாகப் பெரிய  அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்வார்கள். [மத்தேயு Mathew 24 அதிகாரம்  24.]

வேறுசில தூதா்களும் அற்புதங்கள்  செய்துள்ளனா், அதனால்   அவா்கள் கடவுளாக முடியுமா ?

எலிஸா  குருடா்களுக்கு பார்வைகொடுத்தார்(II Kings இராஜாக்கள் 6:17&20).

வாற்கோதுமையின் இருபது அப்பங்களையும்  தாள் கதிர்களையும் 100 பேருக்கு பங்கிட்டு கொடுத்தாா் (பரக்கத்)   (II Kings இராஜாக்கள் 4:44)

எலிஸா நாமனை குணப்படுத்தினாா் (II Kings இராஜாக்கள்  5:14).

அதே போன்றதான எலிஸாவும்  செய்தார் (I Kings இராஜாக்கள் 17:22).

எலிஸாவின்  எழும்பு பட்டதும் இறந்தவா் உயிர்ப்பித்தார் (II Kings இராஜாக்கள் 13:21).

மோஸே  மற்றும் அவரது  மக்கள் சாவுக்கடலை கடந்தனா்(Exodus – யாத்திராகாமம் 14:22).

Leave a Response