அமெரிக்கா பெண்ணுரிமை போராளி ஷரிஃபா கார்லா

பிறப்பில் கிறிஸ்தவரான இவர் பெண்ணுரிமைக்காக போராடும் பெண்ணுரிமைப் போராளி இஸ்லாத்திற்கெதிராக அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்டுவரும் வெறுப்புப் பிரச்சாரம் இவரை இஸ்லாத்தை வெறுப்பவர்களில் ஒருவராக ஆக்கியிருந்தது, இஸ்லாம் பெண்ணுரிமை மறுக்கிறது என்று எண்ணி இஸ்லாத்தை இவர் அதிகமதிகம் வெறுத்தார், வெறுப்பு ஒரு கட்டத்தில் பகையாக மாறியது இஸ்லாத்தை அழிக்க துடித்தார். அதற்கான வாய்ப்புகளைத் தேடி அலைந்தார் இந்நிலையில் இவரைப் போன்றே பலரும் இந்த எண்ணத்தில் இருப்பதை கண்டறிந்தார். எண்ணங்கள் ஒன்று பட்டதால் அனைவரும் ஒரு குழுவாக இணைந்தனர் அவர்கள் அனைவரும் இஸ்லாத்தை அழிக்க சூழ்ச்சித் திட்டங்களை வகுத்தனர் அல்லாஹ்வும் சூழ்ச்சி திட்டங்களை வகுத்தான் பின்னர் என்ன நடந்தது தெரியுமா “ஷரீஃபா கார்லா” இஸ்லாத்தை ஏற்றார் இதனை அவரது வார்த்தைகளில் நாம் தெரிந்துகொள்வோம் வாருங்கள்

நான் ஏன் முஸ்லிம் ஆனேன் :
இஸ்லாத்தை தழுவியதை குறித்து ஷரீஃபா கார்லா கூறியதாவது அப்போது நான் டீன்-ஏஜ் வயது பெண் இஸ்லாத்திற்கு எதிரான அவதூறு பிரச்சாரம் என்னை இஸ்லாத்தை எதிர்க்கும் மன நிலைக்கு தள்ளியிருந்தது, நான் இஸ்லாத்தை முழுமூச்சுடன் எதிர்த்தேன் பகைத்தேன் இஸ்லாத்தை எதிர்ப்பதையும் அதனை அளிப்பதையும் வாழ்க்கையின் உன்னத லட்சியமாகக் கொண்டு வாழும் மனிதர்களை கண்டுபிடித்து அவர்களுடன் ஒரு குழுவாக இணைந்து செயல்பட்டேன்.

அனேகமாக அக்குழுவில் உள்ளவர்கள் அரசு ஊழியர்கள் இதனை அவர்கள் அரசு வேலையாக செய்யவில்லை என்றாலும் தங்களின் வேலைகளுக்கு மத்தியில் இதில் சிறப்பு கவனம் செலுத்தவே செய்தார்கள், என்னை பொறுத்தவரை நான் எதனையும் தெளிவாக உச்சரித்துப் பேசுபவள் ஒன்றில் ஆர்வமில்லாமல் இருப்பவரை கூட ஆர்வபடுத்தும் அளவுக்கு பிறரை ஊக்கப்படுத்தும் திறமை என்னிடம் இருந்தது அத்துடன் நான் பெண்ணுரிமைக்காக வாதாடுபவள் மேற்கண்ட எனது திறமைகளை புரிந்து கொண்ட அக்குழுவில் உள்ள ஒருவர் என்னிடம் சொன்னார் “மத்திய கிழக்கு நாடுகளுடனான சர்வதேச உறவு” குறித்த படிப்பை பட்டமேற்படிப்பு தேர்ந்தெடுத்து படித்தால் எகிப்து நாட்டில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் உனக்கு வேலை கிடைக்க ஏற்பாடு செய்வேன் அதற்கு நான் உத்தரவாதம் என்றார், எகிப்து முஸ்லிம் பெண்களிடம் பெண்ணுரிமை குறித்து பேசி உணர்ச்சிமயமான கொந்தளிப்பை உருவாக்க வேண்டும் பெண்ணுரிமை இயக்கம் ஒன்றினை தொடங்கி இஸ்லாத்திற்கு எதிராக முஸ்லிம் பெண்களை திருப்ப வேண்டும் அதற்கு நான் பயன்படவேண்டும் இதுவே அவர் செய்யும் உதவிக்கு கைமாறாக என்னிடம் எதிர்பார்த்தது.

நானும் இதனை அறிய வாய்ப்பாகவே கருதினேன் இதற்கு நான் உடன்பட்டால் படிப்பு வேலை எனக்கு கிடைக்கும் அத்துடன் இஸ்லாத்திற்கு எதிரான நீண்டகால எனது ஆத்திரங்களை தீர்த்திட ஒரு களமும் கிடைக்கும், முஸ்லிம் பெண்களை எனது நோக்கத்திற்கு உட்படுத்தி விட முடியும் என்று உறுதியாக நம்பினேன் ஏற்கனவே பல தொலைக்காட்சி சேனல்களில் அவர்களை கண்டிருக்கிறேன் ஏழைகளாகவும் ஒடுக்கப்பட்டவர்களாகவும் அவற்றில் அவர்கள் சித்தரிக்கப்பட்டு இருந்தார்கள்.

‘இருபதாம் நூற்றாண்டின் சுதந்திரம் எனும் வெளிச்சத்திற்கு’ அவர்களை அழைத்து வந்துவிட வேண்டும் என்று பெரிதும் ஆசைப்பட்டேன் என் நோக்கங்களை மனதில் நிறுத்தியவளாக கல்லூரி சென்றேன் பாடங்களை பயின்றேன் எனது பட்ட மேற்படிப்பில் குர்ஆன்-ஹதீஸ் மற்றும் இஸ்லாமிய வரலாறுகளை படிக்க வேண்டி இருந்தது.

திரித்துக் கூறவும் மாற்றி கூறவும் தான் அவற்றை கற்றேன்,

எனினும் ஒரு விஷயத்தில் உஷாராக இருந்தேன் அது நான் இஸ்லாத்தை ஆழமாக படிக்கும் சமயத்தில் அதிலுள்ள சில அம்சங்கள் என்னை ஈர்த்து விடலாம் இஸ்லாம் என்னை கவர்ந்து விடலாம் எக்காரணம் கொண்டும் அது நடந்துவிடக்கூடாது அதற்காக அதே சமகாலத்தில் கிறிஸ்தவத்தையும் கற்றுக் கொள்ள முடிவு செய்தேன்,

அப்போது தான் எனது நோக்கத்தில் என்னால் நிலைத்திருக்க முடியும் ஆதலால் கல்லூரி வளாகத்திலேயே கிறிஸ்துவ மதம் தொடர்பான பாடத்தை பேராசிரியர் ஒருவரிடம் பயின்றேன் ‘நல்லாசிரியர்’ என்று நற்பேறு பெற்றிருந்த அவர் ஹாவர்ட் பல்கலையில் இறையியல் துறையில் முனைவர் பெற்றவராவார் சரியான திசையில் செல்கிறேன் என்று நினைத்தேன் ஆனால் அதற்குப் பிறகே எல்லாம் நடந்தன.

எனது வாழ்வின் முக்கியமான திருப்புமுனை ஏற்பட அந்த பேராசிரியரே காரணமானார்

இயேசு ஒரு இறைத்தூதர் என்று மட்டுமே அவர் நம்பினார் பாடம் நடத்தும் போது தமது கொள்கை குறித்த ஆதாரங்களை கிரீக்,ஹீப்ரூ மொழியில் உள்ள பைபிளின் மூலப் பிரதிகளில் இருந்து எடுத்துத் தருவார் ஆரம்பகால கிறிஸ்தவ மதத்தில் திருத்துவ கொள்கையும் கிடையாது, தெய்வீக தன்மையும் கிடையாது என்று போதித்தார் அவ்விரண்டும் எவ்வாறு கிறிஸ்தவத்தில் புகுந்தன என்பதை வரலாற்று ஆதாரங்களோடு விலகிக்கொண்டார் சில காலம் கழித்து நிறைவடைந்தது அத்துடன் என்னுள் இருந்த கிறிஸ்தவ மதத்தின் மீதான நம்பிக்கையும் தகர்ந்து போனது எனினும் இஸ்லாத்தை ஏற்க நான் தயாராக இல்லை

தொடர்ந்து கல்லூரி செல்லவே செய்தேன் என்னுடைய எதிர்கால நலனுக்காகவும் படிப்பை தொடர்ந்தேன் இப்படியே மூன்று ஆண்டுகள் கடந்து போயின

இந்நிலையில் முஸ்லிம்களின் மத நம்பிக்கை குறித்து கேள்விப்பட்டேன் ஒருநாள் முஸ்லிம் மாணவர் ஒருவரிடம் பேசும் வாய்ப்பு கிடைத்தது அவர் முஸ்லிம் மாணவர் அமைப்பை சேர்ந்தவர் (Muslim Students’ Association) அவரிடம் முஸ்லிம்களின் மத நம்பிக்கை குறித்து பேசினேன் என்னுடைய எல்லா கேள்விகளுக்கும் அவர் அறிவு பூர்வமான பதிலை தந்தார் எனக்கு ஒரு தனிப் பாடமே நடத்தினார் ஒரு நாள் சகோதரர் என்னை தொடர்பு கொண்டு ஒரு முஸ்லிம் குழுவினர் நகர்ப்புறத்தில் உள்ளனர் அவர்களை நீங்கள் சந்திக்க வேண்டும் என விரும்புகிறேன் வர இயலுமா என கேட்டார்
நானும் ஒத்துக்கொண்டேன் அங்கு சென்றதில் அங்கே ஒரு அறை அதில் சுமார் இருபது ஆண்கள் அமர்ந்திருந்தனர் எனக்கு ஒரு இருக்கை காலியாக விடப்பட்டிருந்தது அது மூத்த வயதுடைய பாகிஸ்தான் சகோதரருக்கு நேராக உள்ள இருக்கை அவர் கண்ணியமான மனிதராக காட்சியளித்தார் அவர் கிறிஸ்தவம் குறித்து அதிகம் தெரிந்தவராக இருந்தார் நானும் அவரும் திருக்குர்ஆன் மற்றும் பைபிள் பற்றி கலந்துரையாடினோம் விவாதித்தோம் நேரம் அதிகாலை வரை வரும் நீடித்தது கடைசியில சகோதரர் என்னிடம் கேட்டார் கிறிஸ்தவ மதத்தை நீ தெரிந்துள்ளது என்ன ? என்று கேட்டுவிட்டு இஸ்லாத்தை ஏற்குமாறு எனக்கு அழைப்பு விடுத்தார்.

கல்லூரிக்குச் சென்ற மூன்று வருட காலத்தில் பலரிடம் கல்வியைத் தேடி உள்ளேன் ஆராய்ச்சி செய்துள்ளேன் பலருடன் பேசியுள்ளேன் விவாதித்து உள்ளேன் யாரும் என்னிடம் இஸ்லாத்தை ஏற்குமாறு கூறியதில்லை ஆனால் மரியாதைக்குரிய சகோதரர் எனக்கு அழைப்பு விடுத்தார் அவரது அழைப்பு எனக்குள் மாற்றத்தை விதைத்தது அல்லா என் இதயத்தை திறந்தான் இஸ்லாம் தான் உண்மையான கொள்கை என அப்போது எனக்கு புரிந்தது இதுவே தக்க தருணம் உடனே நாம் முஸ்லீம் ஆகி விடவேண்டும் என்று முடிவு செய்தேன்

அவரின் முன்னிலையில் ஆங்கிலத்திலும் அரபியிலும் கலிமாவை மொழிந்து இஸ்லாத்தை ஏற்றேன் (அல்ஹம்துலில்லாஹ்)

அச்சமயத்தில் உடம்பு குண்டாவது போன்றும் உடல் எடை கூடியது போன்றும் விசித்திரமான ஒரு உணர்வைப் பெற்றேன் வல்ல ரஹ்மான் எனக்கு புதியதொரு வாழ்வை தந்துள்ளான் அது கறைபடியாத வாழ்க்கை அத்துடன் சொர்க்கம் செல்லும் வாய்ப்பையும் வழங்கியுள்ளான்

மீதமுள்ள வாழ்நாளை வணக்க வழிபாட்டில் கழித்து முஸ்லீமாக மரணிக்கும் பாக்கியத்தை நல்கும் படி அல்லாஹ்விடம் பிரார்த்திக்கிறேன்

நான் இஸ்லாத்தை அழிக்க நினைத்தேன் இஸ்லாம் என்னை வென்றது, நான் திட்டமிட்டேன் அல்லாஹ்வும் திட்டமிட்டான் அல்லாஹ்வின் திட்டமே வெற்றியடைந்தது நானும் ஈடேற்றம் அடைந்து விட்டேன்

Source : New Muslims Story, Page – 57

Leave a Response