என்னை கவர்ந்த இஸ்லாம் -முன்னால் பாதிரியார் ஜோசுவா எவன்ஸ்

அமெரிக்காவை சேர்ந்த ” ஜோசுவா எவன்ஸ் ”கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்த இவர் கிறிஸ்தவ பாதிரியாராகவும்,கிறிஸ்தவ பிரச்சார அழைப்பாளராகவும் ஆகிட விரும்பினார் ஆனால் இறைவன் இவரின் ஆசையை மாற்றி இஸ்லாமிய அழைப்பாளராக மாற்றினான் …

கிறிஸ்தவத்தின் மீது நம்பிக்கை இழந்தார் :

1996 ஆம் ஆண்டு அவரது வாழ்க்கை மாற்றத்தை சந்தித்தது, கிறிஸ்தவ அழைப்பாளர் கனவுடன் பாப் ஜான்ஸ் பல்கலையில் [BOB JONES UNIVERSITY] சேர்ந்து பைபிளை முழுமையாக படித்த பிறகு தான் அவரின் பாதிரியார் கனவு தகர்ந்து போனது, பைபிளில் அவர்கண்ட முன்று விஷயங்கள் அதன் மீது அவர் வைத்திருந்த நம்பிக்கை தகர்தெறிந்தது.
பைபிளில் காணப்பட்ட குளறுபடிகள் :
பைபிளை அவர் ஆய்வு ரீதியாக படிக்கத் தொடங்கிய பொழுது அதில் பல தவறுகள் இருப்பதை கண்டறிந்தார்.

பைபிள் குறித்து அவர் ஆய்வு செய்த போது பல வகையான பைபிள்கள் அவருக்கு கிடைத்தன அவை அனைத்தும் ஒன்றுக்கு ஒன்று முரணாக இருந்தது ஒரு பைபிளில் இருந்த செய்தி இன்னொரு பைபளில் இல்லை ஒரு பைபளில் இல்லாத செய்தி இன்னொரு பைபளில் கூடுதலாக இருந்ததை கண்டார். சொந்த நலனுக்காக சேர்த்தல் – நீக்குதல் இருப்பதை கண்டறிந்தார் இறைவனின் வார்த்தையில் அப்படி இருக்க கூடாது என்று நினைத்தார்

2.முன்மாதிரியாக இயலாத பைபிள் கதாபாத்திரங்கள் :
சிறுவயதில் சர்ச்சில் வகுப்புகளில் அவர் கலந்து கொண்ட காலத்தில் நோவா [நூஹ் நபி ] மோசஸ்[மூஸா நபி ] இன்னும் இயேசு[ஈஸா நபி] குறித்தும் பல செய்திகளை கேள்விப்பட்டிருந்தார் . பைபிளை படித்த சமயத்தில் அவர்களில் சிலரை பற்றி மிக மோசமாக கூறப்பட்டிருந்தது மது அருந்துதல் ,விபச்சாரம், தகாதபுணர்ச்சி [INCEST] போன்றவற்றில் அவர்கள் ஈடுபட்டதாக அதில் காணப்பட்டது
மிகவும் அற்புதமான விஷயங்களை நிகழ்த்திய அவர்களிடம் இத்தகைய ஒழுக்க கேடுகளும் இருந்தனவா ? தனக்குத் தானே கேள்வி கேட்டு கொண்டார் ஜோசுவா

3.திரித்துவக் கொள்கை :
கிறிஸ்தவத்தில் ஜோசுவாக்கு பிடிக்காமல் போன முன்றாவது விஷயம் திரித்துவக் கொள்கையாகும் .அவர் புதிய ஏற்பாட்டிலும் ,பழைய ஏற்பாட்டிலும் ஓரிறைக் கொள்கை பற்றி கூறப்பட்டிருந்ததை அறிந்தார் ,எனினும் கிறித்தவர்கள் பிதா,சுதன்,பரிசுத்த ஆவி எனும் முக்கடவுள் கொள்கையைக் கடைபிடித்தனர் இது அவருக்கு பெரும் குழப்பத்தை தந்தது .
பின்னர் எது உண்மை என்று தன் தேடலை துவங்கினார்

இஸ்லாத்தை ஏற்றார் :
இந்நிலையில் முஸ்லிம் ஒருவரின் நட்பு அவருக்கு கிடைத்தது .அவர் திருக்குர்ஆன் மொழிபெயர்ப்பு ஒன்றின்றி ஜோசுவாவுக்கு தந்தார் . திருக்குர்ஆனை ஆரம்பம் முதல் கடைசி [COVER TO COVER]வரை படித்த பிறகு 1998ம் ஆண்டு இஸ்லாத்தை ஏற்றார் .

கேள்வி பதில் நிகழ்ச்சி :
அமெரிக்காவில் இரண்டு தொலைகாட்சிகளை நடத்தி வரும் ஜோசுவா, தொலைகாட்சி நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்டார் அதில் இஸ்லாத்தை ஏற்றது குறித்து அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும்-அதற்கான பதில்களும் பின்வருமாறு

கேள்வி : உங்கள் மத நம்பிக்கை குறித்து கூறுங்கள் ?
ஜோசுவா : சிறுவயதில் எனது சொந்த ஊரான கிரீன்வில்லி[GREENVILL] இல் படித்த காலத்தில் இருந்தே மத நம்பிக்கை கொண்டவானாக திகழ்ந்தேன் .

கேள்வி :உங்களின் கிறிஸ்தவ மதத் தொடர்பு குறித்து கூறுங்கள் ?
ஜோசுவா :எனது கிறிஸ்தவ தொடர்பு மிகவும் பழமையானது பாளர் பருவத்தில் [சிறுவயதில் ] இருந்தே சர்ச்சுகளில் நடக்கும் பைபிள் வகுப்புகளில் கலந்து கொண்டுள்ளேன் உலகப் புகழ்பெற்ற பைபிள் சிறப்பு பல்கலைகழகமான பாப் ஜான்ஸ் பல்கலையில் [BOB JONES UNIVERSITY] கிறிஸ்தவ மிஷினரி அமைச்சராக ஆக வேண்டும் என்பதற்காகவே சேர்ந்தேன் மேலும் பைபிள் சிறப்பு கல்வியாளராக ஆகிட வேண்டும் என்றும் விரும்பினேன். இதற்காக ஹிப்ரு மற்று க்ரிக் மொழி பைபில்களையும் ஆய்வு செய்துள்ளேன். .

கேள்வி : எப்பொழுது இஸ்லாத்தை ஏற்றிர்கள் ? அதற்கான காரணம் என்ன ?
ஜோசுவா :பகுப்பாய்வு என்ற அடிப்படையில் ஆறு அல்லது ஏழு தடவை பைபிளை ஆரம்பம் முதல் கடைசி வரை [COVER TO COVER] முழுமையாக படித்தேன்,அப்போது அதில் பல முரண்பாடுகள் இருப்பதை அறிந்தேன் அதன் விளைவு எது சத்தியம் என்று தேட தொடங்கினேன். ஒருநாள் முஸ்லிம் நண்பர் ஒருவரை சந்தித்தேன் அவர் பள்ளிவாசலுக்கு வெள்ளிகிழமை [ஜும்மாஹ்] தொழுகைக்கு வருமாறு என்னை அழைத்தார், முதன்முதலில் நான் முஸ்லிம்களின் பள்ளிவாசலுக்கு சென்றேன் அப்போது நான் இஸ்லாத்தை ஏற்கவில்லை முஸ்லிம்களின் தொழுகையை பார்த்தேன், அது என்னை அதிகம் கவர்ந்தது,எனது உள்ளத்தில் எதோ ஒரு மாற்றத்தை விதைத்தது ,தொழுகைக்கு பின்னர் திருக்குர்ஆன் பிரதி ஒன்றினைத் தருமாறு நண்பரிடம் வேண்டினேன் அவர் தந்தார் ,சுமார் ஒரு வாரம் அதை முழுமையாக படித்தேன் [COVER TO COVER]அதுவே எனக்கு போதுமானதாக இருந்தது ,1998 டிசம்பர் மாதம் இஸ்லாத்தை ஏற்றேன் [அல்ஹம்துலீலாஹ்]

Ammu❤️:
கேள்வி :உங்களின் மதமாற்றமுடிவை உங்களின் குடும்பம் எப்படி ஏற்று கொண்டனரா ?
ஜோசுவா : எங்கள் வீட்டில் எல்லாரும் கிறிஸ்தவ கொள்கையில் பிடிப்பாக உள்ளவர்கள் முதலில் தனியாக கூப்பிட்டு பேசினார்கள் இஸ்லாத்தை ஏற்காதே என்று இப்போது எந்த பிரச்னையும் இல்லை

கேள்வி :ஒருவர் சரியான முறையில் இஸ்லாத்தை ஏற்பது எப்படி ?
ஜோசுவா :இறைவன் ஒருவன் தான் என்றும் இறைவனின் தூதர் முஹம்மது நபி ஸல் என்றும் வாயால் மொழிந்து மனதால் சாட்சி கூறினால் அவன் இஸ்லாத்தை ஏற்று கொள்கிறான்

இஸ்லாமிய தாவா பணி :
பாதிரியார் கனவுடன் கல்லுரி சென்ற ஜோசுவா இஸ்லாத்தை ஏற்ற பின்பு ‘’யுஷாஉ’’ எனும் அழகிய பெயரில் இஸ்லாமிய அழைப்பாளராக செயல்பட்டு வருகிறார் தற்போது அமெரிக்காவில் உள்ள ப்ளோரிட[FLORIDA] மாநிலத்தில் வாழ்ந்து வரும் இவர் ,விவாதங்கள்,உரைகள்,இணையதளங்கள் மற்றும் முகநூள் வழியாக இஸ்லாமிய பிரச்சாரம் செய்து வருகிறார்
SOURCE: HTTP://yushaevans.com/bio/
www.youtube yushaevans

Leave a Response