என்னை கவர்ந்த இஸ்லாம் – பிரஞ்சுப் பாடகி டியாம்ஸ்

இவரது இயற்பெயர் மெலனி ஜார்ஜியோடிஸ் [MELANIE GERGIADES] ”டியாம்ஸ் ” என்பது இசைதுரைக்காக வைத்துக் கொண்ட பெயர். பிரான்சில் உள்ள ஈசோனி [ESSONNE]மாநிலத்தில் வசித்தார் . இவர் தன்னுடைய 19 ஆம் வயதில் இசைத்துறையில் சாதிக்க துடங்கினார் ராப் பாடல்களில் பிரான்ஸ் நாடு முழுவதும் பிரபலமானார்.

மன அழுத்தத்தில் விழுந்த டியாம்ஸ் :
நட்சத்திர புகழை அடைந்தாலும், திரைத்துறைக்கே உரித்தான அழுத்தங்களும் , நெருக்கடிகளும் டியாம்சை வாட்டி வதைத்தன.பெண்ணாக இருந்ததால் அது இன்னும் அதிகமாக இருந்தது

மனநல பாதிப்புக்கு இஸ்லாமே நன்மருந்து :
வீட்டில் முடங்கி கிடந்த டியாம்சைகாண வந்தார் அவரது முஸ்லிம் தோழி ஒருவர். டியாம்சின் நிலையை கண்ட அவர்,டியாம்சின் அறையில் தொழுது குணமடைய பிரார்த்தனை செய்தார் . தோழியின் பின்னால் நின்று டியாம்சும் தொழுதார்.
முழங்காலிட்டு நெற்றியை தரையில் வைத்து சுஜுது செய்யும் பொழுது மிகப் பெரிய அளவில் மனம் நிம்மதி அடைவதை உணர்ந்தார். தொடர்ந்து இஸ்லாத்தை படித்தார்.விளைவு 2008 ஆம் ஆண்டு இஸ்லாத்தை ஏற்றார். ஆரம்பத்தில் தலை மற்றும் உடலை முழுமையாக மறைக்கும் ஆடையை அணிந்து வந்த டியாம்ஸ் , 2012 ஆம் ஆண்டு முதல் புர்கா அணியைத் தொடங்கினார் .

நான் ஏன்முஸ்லிம் ஆனேன் ?
பிரான்ஸ் நாட்டின் பிரபல தொலைகட்சியான T1 TV[டி1 டிவி ] ‘செப்ட் எ எயிட்'[ SEPT A HUIT] என்ற பெயரில் தொலைகாட்சி செய்தித் தொடரை நடந்தி வந்தது அதில் 2012 ஆம் ஆண்டு செப்டம்பர் 30 இஸ்லாத்தை ஏற்றது குறித்து அவர் கூறியதாவது

கேள்வி :இஸ்லாத்தை நீங்கள் எப்படி ஏற்றிர்கள் ? உங்களுக்கு இஸ்லாம் என்ன தீர்வை கொடுத்தது ?
டியாம்ஸ்:தொழிலாகத் தேர்ந்துதேடுத்த இசைத்துறையில் நான் வெற்றி பெறவே செய்தேன்,பணம்-புகழ் சம்பாதித்தேன் ஆனால் நிம்மதியை இழந்தேன். உளவியல் நிபுணர்கள் பலரிடம் நான் அழைத்து செல்லப்பட்டேன்.பலமுறை எனக்கு கவுன்சிலிங் தரப்பட்டது,ஆனால் அவையல்லாம் எந்த பலனையும் எனக்குத் தரவில்லை .கடைசியில் பிரம்மை பிடித்தவளாக மாறிப் போனேன்.இந்நிலையில் எனது உடல் நிலைப் பற்றி கேள்விப்பட்ட பள்ளிதோழி ஒருத்தி என்னை நோய் விசாரிக்க வந்தாள், அவள் முஸ்லிம் பெண் விடை பெரும்பொழுது என்னிடம் சொன்னால் ‘’நான் உனக்காக இங்கே தொழுது இறைவனிடம் பிரார்த்தினை செய்யப்போகிறேன்.’’ நான் கேட்டேன் நானும் உன்னுடம் தொழ இயலுமா? ஆம் என்றால் அவள் தொழ கற்று தந்தாள் நான் தொழுதேன் அப்போது நான் இஸ்லாத்தில் இணையவில்லை நான் தொழும்போது சுஜுதுவில் [முழங்காலிட்டு நெற்றியை தரையில் வைத்து ] எனக்கு என் மன அழுத்தம் குறைவதை உணர்ந்தேன் இந்த ஒரு செயல் இஸ்லாத்தில் எனக்கு நிம்மதியை கொடுக்கிறது என்றால் இன்னும் இருக்ககூடிய விஷயங்கள் எல்லாம் எனக்கு நிம்மதியை தான் தரும் என்று எண்ணினேன் [வருத்தம் என்னவென்றால் ஒரு முறை சுஜுது செய்தவர் இஸ்லாத்தை ஏற்கிறார் ஆனால் முஸ்லிம்கள் ?]
இந்நிலையில் இஸ்லாத்தை மேலும் தெரிந்து கொள்ள விரும்பினேன்,தொடர்ந்து திருக்குர்ஆன் படித்தேன்.திருக்குர்ஆன் புரிந்து படிபதற்காக 2008 ஆம் ஆண்டு மொரீசியஸ் நாட்டுக்கு சென்றேன்.இஸ்லாம் அமைதி மார்க்கம்: அன்பையும் சகிப்புதன்மையும்,பிறருக்கு உதவி செய்வதையும் போதிக்கு மார்க்கம் என்பதை தெரிந்து கொண்டேன் .

கேள்வி:உங்களுக்கு முளைச் சலவை செய்யப்பட்டதாக கூறப்படுகிறதே?
டியாம்ஸ் : நான் இஸ்லாத்தை ஏற்றது தெரிய வந்தவுடன் மீடியாக்கள் பல்வேறு கதைகளை எழுதத் தொடங்கின,இதுவரை என்னை முன்னிலைபடுத்தி பிரபலப்படுத்தி வந்த ஊடகங்கள் இப்போது திருமணம் செய்வதற்காக மதம் மாறினேன் என்றும் முளைச் சலவை செய்யப்பட்டதாகவும் என்னைச் சாடின. நான் கேட்கிறேன் பெண்ணாகப் பிறந்தவள் சுய சிந்தனையும்,சொந்த ஆளுமையும் கிடையாதா?
பிறரால் முளைச் சலவை செய்யப்படுவது அல்லது கணவனால் நிர்பந்திக்கபடுவது இரண்டை தவிர அறிவுச் சுதந்திரம் என்பது பெண்களுக்கு இல்லையா ? நீங்கள் பதில் சொல்லுங்கள்? பதில் இல்லை .

கேள்வி :இஸ்லாம் தீவிரவாத மதம் என்று உணர்கிறிர்களா?
டியாம்ஸ்: இஸ்லாம் தீவிரவாத மதம் என்றும்: அதனை ஏற்றதால் எனக்குத் தீவிரவாத மனோநிலை வந்து விட்டதாகவும் இங்கே பொதுப்புத்தியில் வலிந்து வலிந்து திணிக்கப்படுகிறது. எவ்வளவு பெரிய அபத்தமான குற்றச்சாட்டு இது,நான் திருக்குர்ஆனை படித்தேன்,இஸ்லாத்தை விரும்பி ஏற்று கொண்டேன்.என்னால் எங்கயும் தீவிரவாதம் நடக்கவில்லை. நான் அழுத்தமாக கூறுகிறேன் இஸ்லாம் அமைதி மார்க்கம்.

கேள்வி ; புர்கா பெண்களின் அடிமைத்தனத்தின் அடையாளமா ?
டியாம்ஸ் : பிரான்ஸ் நாடு சுதந்திரத்தை ஊக்குவிக்கும் நாடு,நான் சகிப்புத்தன்மையுள்ள ஒரு சமுகத்தில் வாழ்வதாக தான் நினைக்கிறேன் .இந்நாடு சுதந்திரத்தை கட்டிகாக்கும் நாடாக இருக்கும் வரை நான் புர்கா அணிவேன்.ஊடங்களின் விமர்சனங்களையும் ,ரெடிமேட் தீர்ப்புகளையும் பொருட்படுத்தமாட்டேன்.

இங்கே தொகுப்பாளர் கேட்டதை போன்று புர்கா அணிய சொல்லி யாரும் என்னை கட்டாயப்படுத்தவில்லை.விரும்பித்தான் அதனை அணிகிறேன். இது எனக்கு அடிமைத்தனமாக தோன்றவில்லை.ஆரம்பத்தில் நான் புர்கா அணியவில்லை தான் ஆனால் இஸ்லாத்தைப் படிக்கபடிக்க அதன் மாண்பினை அறிந்தேன். புர்கா விரும்பி அணிந்து வருகின்றேன். .

இசையை விட்டு முழுமையாக விலகிய டியாம்ஸ் ஆப்பிரிக்காவில் மனிதாபிமான பணிகளில் ஈடுபட்டு வருகிறார். அல்லாஹ் அவரை பொருத்திக் கொள்வானாக …

SOURCE; Diam’s,autobiographie by Diam’s
MOROCCO WORLD NEWS

Leave a Response