இஸ்லாமிற்கான எனது பயணம்

இவர் அமெரிக்காவில் உள்ள மேற்கு வேர்ஜினியாவில் சார்லஸ்டன் (Charleston) பகுதியை சேர்ந்தவர் கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்த இவர் வாலிபப் பருவத்தில் பல தவறுகள் செய்து சிறைக்கு சென்றார் தனது பாவங்களை நினைத்து வருந்தினார் இறைவனிடம் பாவமன்னிப்புக் கோர முற்பட்டார் அப்பொழுது கிறிஸ்தவத்தின் பாவமன்னிப்பு கொள்கை அவருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது விரைவில் இஸ்லாத்தை ஏற்றார் வாருங்கள் அவர் சொல்வதைக் கேட்போம்

‘ஞானஸ்நானம்’ எனப்படும் புனித நீர் சடங்கை ஏற்றுக்கொள்ளவும் ‘பாப்டிஸ்ட்’ கிறிஸ்தவ பிரிவை சேர்ந்தவன் நான், வாலிப பருவம் வரை சர்ச்சுக்கு செல்லும் வழக்கம் கொண்டிருந்தேன் அத்துடன் ஞாயிற்றுக்கிழமைகளில் நடக்கும் மத வகுப்புக்குச் செல்லும் வழக்கமும் என்னிடம் இருந்தது இவ்வாறு மத பற்றுடன் வளர்ந்த நான் வாலிப பருவத்தில் பெண்களுடனான நட்பை பெரிதும் விரும்ப ஆரம்பித்தேன், அது ஒரு பருவ கோளாறு, அது பாவம் என்று எனக்குள் உறுத்தியது இறைவனிடம் என்னை மன்னிக்குமாறு வேண்டினேன்
பாவமன்னிப்பு கேட்கும் வாசகம் ஞாயிற்றுக்கிழமை வகுப்புகளில் எனக்கு கற்றுத் தரப்பட்டு இருந்தது

“இயேசுவின் பெயரால் இறைவா என்னை மன்னிப்பாயாக” என்பதே அந்த வாசகம் இதற்கிடையில் மிக மோசமான நிகழ்வுகள் எனது வாழ்க்கையில் நடந்தன தலையில் குண்டடிபட்டேன் மருந்து மாத்திரைகளோடு வாழ்க்கையை கழித்தேன் வேலை இழப்பு குடும்பத்தார்கள் மற்றும் நண்பர்களின் இறப்பு ஆகியவை என்னை வாட்டி எடுத்தது ஒரு மோசமான காலகட்டம்

அச்சமயங்களிலும் எனது பாவங்கள் என்னை விட்டு நீங்கவில்லை கவுண்டி சிறையில் சில காலம் சிறைவாசத்துக்கு பின்பு பைபிளுடன் நெருங்கிப் போனேன் நம்பிக்கையுடன் பைபிள் படித்தேன், படுக்கும் முன்பு ஜெபம் செய்து விட்டு உறங்கினேன், அப்பொழுது சில கேள்விகள் என் முன் நின்றனர் அவை கிறிஸ்தவ மத நம்பிக்கை சம்பந்தப்பட்டவை சிறைவாசத்துக்குப் பின்பு ஒரு கிறிஸ்தவராக வாழ்வதற்கான முயற்சி செய்தேன் எனினும் எனது பழைய பாவங்கள் என்னை வழிமறித்து அது என்னை பலவீனப் படுத்தியது

என்னுள் எழுந்த கேள்விகளில் ஒன்று “இயேசு உலகில் உள்ள எல்லோரின் பாவங்களுக்காகவும் சிலுவையில் இறந்து விட்டார் நானோ இறைவனிடம் மன்னிக்குமாறு கோருகிறேன்” எல்லோரின் பாவங்களுக்காகவும் அவர் சிலுவையில் தன்னுயிரை மாய்த்துக் கொண்டார் எனில் நான் ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும்

இது எனக்கு குழப்பத்தைத் தந்த போதிலும் கிறிஸ்தவ மதத்திலேயே நீடித்தேன் எனது சந்தேகத்திற்கு கிறிஸ்தவத்தில் நின்றே எங்காவது பதில் கிடைத்து விடாதா என்று நினைத்தேன் ??? பதிலை தேடினேன்! இந்நிலையில் இஸ்லாம் மிகவும் சுருக்கமாக எனக்கு அறிமுகமானது அது நண்பர் ஒருவரால் தெருவில் கிடைத்த அறிமுகம் அவர் ஒன்றும் நிறைய அறிந்தவரும் அல்ல நற்குணம் நிறைந்தவரும் அல்ல எப்படியோ அதன் பின்னால் இழுத்துச் செல்லப்பட்டேன் என்று தான் கூறவேண்டும்.

தொடர்ந்து அவருடன் முஸ்லிம்கள் வெள்ளிக்கிழமை தோறும் ஜும்மா தொழுகைக்கு செல்வேன் அத்துடன் கிறிஸ்தவ போதனைகளுக்கும் செல்வேன் வெள்ளிக்கிழமை ஜும் ஆ தொழுகைக்கும் வியாழக் கிழமை இரவுகளில் கிறிஸ்தவ போதனைக்கும் செல்வேன்

இப்படியே 9 மாதங்கள் இவ்விரண்டையும் நான் செய்து வந்தேன் ஒன்பதாவது மாத முடிவில் எனக்கு ‘நேரான பாதையைக் காட்டும் படி இறைவனிடம் பிரார்த்தனை செய்ய தொடங்கினேன்’ ஏனெனில் இஸ்லாமே உண்மை மார்க்கம் என்று அறிந்து கொண்டேன் இறைவன் எனது பிரார்த்தனையை ஒப்புக் கொண்டான் ஒன்பதாவது மாத முடிவில் இஸ்லாம் என் இதயத்தைத் தொட்டது கிறிஸ்தவ மத போதனைகளுக்கு செல்வதை நிறுத்தினேன் சிறிது காலத்திற்குப் பின்னால் 2012ஆம் ஆண்டு நான் திரு கலிமாவை மொழிந்து இஸ்லாத்தை ஏற்றேன் அப்துல் அஜீஸ் எனும் அழகிய பெயருக்கு சொந்தக்காரனானேன்

இஸ்லாம் குறித்து நிறைய கற்றுக் கொள்ளத் தொடங்கினேன் அரபு மொழியையும் தெரிந்துகொண்டேன் எனது வாழ்க்கையில் பெரிய அளவில் மாற்றம் ஏற்பட்டது இப்போது இஸ்லாத்தை பிறருக்கு எடுத்துச் சொல்லும் மகத்தான பணியை செய்து வருகின்றேன்

Source : www.islam-universe.com

Leave a Response