இஸ்லாமிய எதிர்ப்பு கட்சியின் உறுப்பினர் இஸ்லாத்தை ஏற்ற தருணம் அர்னாடு வேண்டூன்

நமது இந்திய தேசத்தில் உள்ள பாஜக, சிவசேனா போன்று இஸ்லாமிய எதிர்ப்பை கட்சியின் கொள்கையாக கொண்டு நெதர்லாந்து நாட்டில் செயல்படும் கட்சி ‘தீவிர வலதுசாரி இஸ்லாமிய எதிர்ப்பு சுதந்திரக்கட்சி’ ( Geert Wilder’s Far Right-wing Anti Islam Freedom Party) இஸ்லாத்தை எதிர்ப்பதையே கட்சியின் பெயராக வைத்து செயல்பட்டு வரும் இவர்கள் முஸ்லிம்களுக்கு எதிராக திரைப்படம் எடுப்பது கார்ட்டூன் வரைவது போன்ற வெறுப்பு பிரச்சாரத்தையும் இவர்கள் தவறாமல் செய்து வந்தனர்

இக்கட்சியின் சார்பில் நெதர்லாந்து பாராளுமன்றத்தில் உறுப்பினராகவும் அந்நாட்டின் முக்கிய நகரங்களில் ஒன்றான ஹாக் (Hague) மாநகராட்சியில் கவுன்சிலராக பதவி வகித்தவர் தான் அர்னாடு வேன்டூன் (Arnoud Van Doorn)

கடந்த 2013 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 27 ஆம் தேதி தனது ட்விட்டர் வலைதளத்தில் ஷஹாதத் பதிவு செய்து இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதாக வெளியுலகுக்கு அறிவித்தார் அர்னாடு. தான் இஸ்லாத்தை ஏற்றது குறித்து வலைப்பக்கத்தில் அவர் கூறியதாவது :

கடந்த 2012 ஆம் ஆண்டு முஹம்மது நபி குறித்து இழிவாக சித்தரித்து தயாரிக்கப்பட்ட “இன்னோசன்ஸ் ஆஃப் முஸ்லிம்ஸ்” திரைப்படம் வெளிவந்தது அப்படத்திற்கு எதிராக உலகம் முழுவதும் முஸ்லிம்கள் கொந்தளித்தனர், பல இடங்களில் போராட்டங்கள் நடந்தன இப்போராட்டங்கள் என்னை சிந்திக்க வைத்தன ஒருவர் இறந்து பல ஆண்டுகள் கழிந்த பின்னரும் அவர் மீது இத்தனை மில்லியன் மக்கள் மரியாதை வைத்துள்ளார்களா ??? அவர் எவ்வளவு மரியாதைக்குரியவராக இருக்க வேண்டும் ??? அவர் போதித்த மார்க்கம் எவ்வளவு உயர்ந்த கொள்கையாக இருக்க வேண்டும் இத்தனை மகத்தான மனிதரையா நாம் எதிர்த்தோம், அவரையா இழிவாக சித்தரித்து திரைப்படம் தயாரித்தோம், அப்படி தயாரிக்கக்கூடிய ஒரு கட்சியில நாம் பணியாற்றுகிறோம், என்று பல நாட்கள் சிந்தித்தேன் பிறகு கட்சியைவிட்டு ஒதுங்கினேன் இஸ்லாத்தை ஆய்வு செய்தேன் அண்ணல் நபியவர்களின் வாழ்க்கை வரலாற்றையும் அதிகமதிகம் படித்தேன் முஸ்லிம்களின் பழக்க வழக்கங்களையும் பண்பாடுகளையும் தெரிந்துகொள்ள எனது மாநகராட்சியில் பணியாற்றிய சக முஸ்லிம் உறுப்பினர்களுடன் பழகினேன்

பின்னர் ஒரு முடிவுக்கு வந்தேன் எனது மாநகராட்சியில் ஒரு பள்ளி இமாமை அதிகமதிகம் விமர்சித்து உள்ளேன் அவர் இந்த நாட்டை விட்டு வெளியேறுவதற்கு பல முயற்சிகளை மேற்கொண்டேன் இஸ்லாத்தைக் குறித்து ஆய்வு செய்த பின்னர் அவரிடமே சென்று அவரின் கரம்பிடித்து இஸ்லாத்தை ஏற்றேன் அல்ஹம்துலில்லாஹ்.

“நான் எனது வாழ்க்கையில் பல தவறுகளை செய்துள்ளேன் அது எனக்கு பல பாடங்களை தந்துள்ளன இஸ்லாத்தை எதிர்த்தே வாழ்நாளில் பெரும்பகுதியை கழித்தேன் ஆனால் இஸ்லாம் தான் எனக்கு நிம்மதி தந்துள்ளது இஸ்லாத்தை ஏற்ற பின்பு உண்மையான வழி எனக்கு கிடைத்தது எனது இம்முடிவு பலத்த எதிர்ப்பை எதிர்கொள்ளலாம் நிச்சயமாக அல்லாஹ்வின் எல்லாவகையான உதவிகளும் கிடைக்கும் எல்லாவற்றையும் வெற்றிகரமாக சமாளிப்பேன் இறைவன் நாடினால்

எந்த நபியை தவறாக சித்தரித்து திரைப்படம் எடுக்க உதவினோமோ அந்த நபியின் அடக்கஸ்தலத்துக்கு சென்று தேம்பித் தேம்பி அழுதேன்

“மஸ்ஜிதின் நபவி” பள்ளி இமாம்களை அழைத்து கடந்த காலத்தில் இஸ்லாத்தை கடுமையாக எதிர்த்த கட்சியில் நான் பணியாற்றிதையும் எனது உள்ளத்தில் இஸ்லாத்திற்கு எதிரான பகைமை உணர்வு மேலோங்கி நின்றதையும், “இனோசென்ஸ் ஆஃ முஸ்லிம்ஸ்” திரைப்படத்திற்கு எதிராக உலகெங்கும் நடந்த போராட்டங்கள் என்னுல் பல வினாக்களை எழுப்பியதை கூறி இன்னும் இறைத்தூதர் குறித்து மேலதிகமாக தெரிந்துகொள்ள ஆசைப்படுவதாகவும் கூறினேன்.

எந்த நபியை தரக்குறைவாக விமர்சித்து எடுக்கப்பட்ட திரைப்படத்திற்கு உதவியாக இருந்தேனோ அந்த நபியின் உன்னத தகவல்களுடன் ஒரு சிறந்த படம் ஒன்றை இயக்கி அதன்மூலம் மேற்கத்திய நாடுகளில் இஸ்லாம் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொள்வேன்.

பிறகு உம்ரா சென்றேன் அங்கு புனித “மஸ்ஜிதுல் ஹராம்” பள்ளியின் தலைமை இமாம் அப்துர் ரஹ்மான் சுதேசி அவர்களை சந்தித்து நான் அறியாமைக் காலத்தில் தவறு செய்துவிட்டதாகவும் அதற்கு பரிகாரமாக தனது வாழ்நாள் முழுவதும் இஸ்லாமிய பிரச்சாரத்தில் ஈடுபட போவதாகவும் தெரிவித்தேன், திருக்குர்ஆனை பரிசாக தந்த சுதேசி இனிவரும் வாழ்நாளை திருக்குர்ஆனின் வழியில் அமைத்துக் கொள்ளுமாறு கூறினார்.

Source :
உக்காள் அரபி நாளிதழ் (சவுதி)
தாருல் அக்பார் அரபி நாளிதழ் (சவுதி)
ஹீர்ரிய்யத் ஆங்கில நாளிதழ் (துருக்கி)
அஹ்ராம் அரபி நாளிதழ் (எகிப்து)
அர்னாடு – ட்விட்டர் வலைப்பக்கம்

Leave a Response