இஸ்லாமியர்கள் பயன்படுத்தும் சிலவார்த்தைகளுக்கு அர்த்தம் என்ன

முஸ்லிம்கள் அன்றாட வாழ்க்கையில் ஒரு சில அரபி வார்த்தைகளை அதிகமாக பயன்படுத்துவது உண்டு அப்படி பயன்படுத்துவதன் மூலமாக தங்களுடைய மாற்றுமத சகோதரர்களும் அந்த வார்த்தையை அதிகமதிகமாக கேட்டு அவர்களும் சில சந்தர்ப்பங்களில் அதை பயன்படுத்துகிறார்கள் அப்படி பயன்படுத்தும் வார்த்தையில் இந்த மூன்று வார்த்தைகளும் மிக முக்கியமானதாக பார்க்க படிகிறது இந்த வார்த்தைகளை பயன்படுத்தும் முஸ்லீம்களும் சரி முஸ்லிமல்லாத சகோதரர்களும் சரி இதன் சரியான அர்த்தத்தை புரிந்து கொண்டால் வார்த்தையை பொருளோடு நாம் பயன்படுத்தலாம் என்ற நோக்கத்தில் இதற்கான விளக்கத்தை தருகிறோம்

👉🏻பிஸ்மில்லாஹ் :

இந்த வார்த்தை முஸ்லிம்களால் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது பெரும்பாலான முஸ்லிம் கடைகளில் பெயர்களாக இந்த வார்த்தை இருக்கிறது இந்த வார்த்தையின் அர்த்தத்தை நாம் தெரிந்துகொண்டால் இதை நாமும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் பயன்படுத்தலாம் திருக்குர்ஆனில் மொத்தம் 114 அத்தியாயங்கள் உள்ளது அதில் 113 அத்தியாயங்களின் தொடக்கத்தில் இந்த பிஸ்மில்லாஹ் என்ற வார்த்தை தான் இருக்கிறது எந்த ஒரு காரியத்தைச் செய்வதாக இருந்தாலும் அதற்கு முதலில் பிஸ்மில்லாஹ் என்று சொல்லி ஆரம்பிக்க வேண்டும் என்பது முஹம்மது நபியவர்கள் நமக்குக் காட்டித் தந்த வழிமுறை ”பிஸ்மில்லாஹ்” என்பதற்கு இறைவனின் திருப்பெயரால் என்று அர்த்தம்

திருக்குர்ஆனில் பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம் என்று இருக்கும் அதாவது அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல இறைவனின் திருப்பெயரால் தொடங்குகிறேன் என்று அர்த்தம்

எந்த ஒரு நல்ல காரியம் செய்வதாக இருந்தாலும் அதில் இந்த வார்த்தையை கூறி செய்வதால் இறைவனின் உதவி நமக்கு கிடைக்கும் இறைவனின் திருப்தியும் இதில் இருக்கும் என்பது இறைவன் நமக்கு காட்டித் தந்த வழியாகும்.

👉🏻அல்ஹம்துலில்லாஹ்

முஸ்லிமல்லாத சகோதரர்களால் அதிகமாக அறியப்பட்ட வார்த்தையில் இதுவும் ஒன்று ஆஸ்கர் விருது பெற்ற ஏ.ஆர் ரஹ்மான் அவர்கள் விருதை வாங்கிய போது
“எல்லா புகழும் இறைவனுக்கே” என்று கூறிய வார்த்தையின் அர்த்தம் தான் அரபியில்
“அல்ஹம்துலில்லாஹ்”

நாம் எந்த ஒரு காரியம் செய்து வெற்றி பெற்றாலும் நம் உள்ளத்தில் பெருமை எனும் ஒரு நோய் வந்து விடக்கூடாது என்பதற்காக இந்த வார்த்தையை இஸ்லாமிய மார்க்கம் நமக்கு கற்றுக்கொடுக்கிறது

நீ நலமாக இருக்கிறாயா என்று ஒரு முஸ்லிமிடம் நீங்கள் கேட்டால் அவருடைய பதில் அல்ஹம்துலில்லாஹ் (இறைவனுக்கே புகழனைத்தும்) நன்றாக இருக்கிறேன் என்று சொல்வார்

இறைவனுடைய நாட்டத்தால் தான் நான் நலமாக இருக்கிறேன் ஆதலால் இறைவனுக்கே புகழ் அனைத்தும்; எந்த ஒரு காரியத்திலும் வெற்றி பெற்றாலும் என்னுடைய சொந்த செயலால் சொந்த முயற்சியால் நான் வெற்றி பெறவில்லை இறைவனின் நாட்டத்தால் தான் வெற்றி பெற்றேன் சொல்வார் ஒருவேளை அந்த உழைப்பில் தோல்வியுற்றால் அது பல மனவேதனையை உண்டாக்கும் ஆதலால் இறைவனின் நாட்டப்படியே நான் வெற்றி பெற்றேன் இறைவனின் நாட்டப்படியே நான் தோல்வியற்றேன் என்று சொல்வதால் மனவேதனையில் இருந்து நாம் தப்பிக்கலாம்

👉🏻இன்ஷா அல்லாஹ்

மற்ற வார்த்தைகளுக்கு அதிகமாக விளக்கங்கள் தெரியாமலிருக்கலாம் ஆனால் இவ் வார்த்தைக்கான அர்த்தம் முஸ்லிம்களாலும் முஸ்லிமல்லாத சகோதரர்களாளும் அதிகமாகவே தெரிந்து பயன்படுத்தப்படுகிறது

இன்ஷா அல்லாஹ் என்றால் இறைவன் நாடினால் நடக்கும் என்று பொருள்

இறைவனின் அனுமதி இல்லாமல் என்னால் எந்த ஒரு காரியத்தையும் செய்ய முடியாது என்ற ஆழமான நம்பிக்கை கொண்டு தனது வாழ்க்கையின் நெறிமுறைகளை முஸ்லிம்கள் பயன்படுத்துகிறார்கள்

ஒரு நிகழ்ச்சி நடைபெறுகிறது என்று ஒரு முஸ்லிமை நீங்கள் அழைத்தால் அவர் இன்ஷா அல்லாஹ் வருகிறேன் என்று சொல்வார் அதாவது இறைவன் நாடினால் தான் என்னால் வரமுடியும் என்று சொல்வார்.
இது ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் இறைவனை நினைவு கூறும் விதமாக இறைவன் நமக்கு கற்றுக்கொடுத்த சில வார்த்தைகள் ஆகும் இந்த வார்த்தைகளை சரியான அர்த்தத்தில் புரிந்து கொண்டு நாம் பயன்படுத்துவதன் மூலமாக இறைவனுடைய நினைவுகளில் நம்மை வழிநடத்தி செல்லும்.

இதுபோல் இன்னும் சில வார்த்தைகளுக்கு அர்த்தம் தேவைப்பட்டால் கமெண்ட் செய்யுங்கள்

Leave a Response