முஸ்லிம்கள் தாடி வைப்பது ஏன் ?

வேறுபாடு காட்டுவதற்காக என்று கூறுவது இதற்கான முழுமையான பதிலாக ஆகாது.

ஆண் என்பவன் தன்னை முழு அளவில் ஆண் என்று வெளிப்படுத்த வேண்டும். பெண் என்பவள் தன்னை முழு அளவில் பெண் என வெளிப்படுத்த வேண்டும். இரண்டுமே அவரவரைப் பொருத்த வரை பெரும் பாக்கியமாகும்.

40 மார்க் வாங்கினால் பாஸ் ஆகி விடலாம் என்றாலும், நூறு மார்க் வாங்கவே அனைவரும் ஆசைப்படுகிறோம்.

மாதம் பத்தாயிரம் ரூபாய் போதும் என்றாலும் வண்ணக் கனவுகள் எல்லாம் நிறைவேறும் அளவுக்கும், அதை விட அதிகமாகவும் கிடைக்க வேண்டும் என முயற்சிக்கிறோம்; ஆசைப்படுகிறோம்.

ஆண்மை எனும் பாக்கியத்தைக் காட்டிக் கொள்வதில் மட்டும் தான் இந்தப் போதுமென்ற மனநிலை இருக்கிறது. முகத்தில் முடி இருப்பதோ, இல்லாமல் இருப்பதோ இல்லறத்திற்கு முக்கியமானது இல்லை என்ற நிலையிலும் இறைவன் ஆணுக்கு மட்டும் முடி வளரச் செய்து பெண்களுக்கு வளரச் செய்யாமல் விட்டுள்ளான்.

ஆடைகளைப் பொருத்த வரை ஆண்கள் அணியும் ஆடையைப் பெண்களும் அணிந்திட முடியும். தாடி வைக்க முடியாது. எனவே அனைத்திலும் முழுமையை விரும்பும் ஆண்களும் – பெண்களும், ஆண்மையிலும் – பெண்மையிலும் முழுமையை விரும்ப வேண்டும் என்று இஸ்லாம் எதிர்பார்க்கிறது.

இன்னும் சொலபோனால் , இஸ்லாம் மனிதனுக்கு ஏற்ற மார்க்கம். மனிதனுக்கு எது உகந்ததோ, அதையே வலியுறுத்தும்.அதுபோல தாடி வைப்பது மனிதனுக்கு நல்லது; நல்லதா என்றெல்லாம் பார்த்து நாங்கள் பின்பற்றுவதில்லை ;எங்களுக்கு கடைமையாக்கபபட்டிருக்கிறது என்ற எண்ணத்தோடு பின்பற்றுவோம் ;இருப்பினும் இஸ்லாத்தின் ஒவ்வொரு போதனையும் மனிதனுக்கு உகந்ததே. நலனை தரக்கூடியதே!

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும் ஆண்களின் தாடி; BBC யின் மருத்துவ ஆய்வறிக்கை…

ஆண்கள் தாடி வளர்ப்பது சுகாதாரமா, சுகாதாரகேடா என்ற வாதப் பிரதிவாதங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இக்கால கட்டத்தில், இது தொடர்பாக இதன் சரியான விளக்கத்தை பெறுவதற்காக தொற்று நோயியல் நிபுணரான டாக்டர் கிரீஸ் வான் டுலேகன் (Dr Chris Van Tulleken) தனது ஆராச்சியை இலண்டண் நகர வீதிகளிலிருந்து ஆரம்பித்தார்.

பல்வேறுபட்ட தாடி வைத்த, தாடி வைக்காத ஆண்களின் தாடைப் பகுதியிலிருந்து சிறிய மாதிரிகளை (Sample) எடுத்து அவற்றை University of Central London ஐ சேர்ந்த நுண் உயிரியல் ஆராச்சியாளரான டாக்டர் ஆடம் ரொபார்ட்ஸிடம் (Dr Adam Roberts) மேலதிக ஆராய்சிக்காக கொடுத்தார்.

இந்த மாதிரிகளில் இருந்து நுண்ணுயிர்கள் தனித்தனியாக வகைப்படுத்தப்பட்டு ஆராயப்பட்டன. இருபது வகையான தாடிகளில் இருந்து நூறு வகையான நுண்ணுயிர்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இவை சாதாரணமாக மனித தோலில் காணப்படுபவையென்றும், அதில் ஒருவகை நுண்ணுயிர் மனித உடலில் உள்ளுறுப்புகளில் கணாப்படுவதெனவும் மேலதிக ஆராய்ச்சியில் அறியப்பட்டது.

பாதகமான விளைவுகள் எதனையும் மனிதர்களுக்கு உண்டாக்கக்கூடிய நுண்ணுயிர்கள் எதுவும் காணப்படாததால், தாடி வைப்பது உடல் நலத்திற்கு கேடானது என்ற கருத்து தவறானது என்று கண்டறிந்தார்கள்.

டாக்டர் ஆடமின் அடுத்த நிலை ஆராய்ச்சிதான் ஆச்சரியமான முடிவை காட்டியது.

இந்த நுண்ணுயிர்களின் நோய் எதிர்ப்புத்தன்மை (Antibiotic) எவ்வாறு இருக்கிறதென்று ஆராய்ந்தபொழுது, தாடி வைத்தவர்களில் காணப்பட்ட நுண்ணுயிர்கள், நோய் எதிர்ப்புத்தன்மையை(Antibiotic ) உருவாக்கக்கூடிய சில இரசாயண பதார்த்தங்களை வெளியிட்டு, இப்பதார்த்தம் மற்றைய நுண்ணுயிர்களை கொன்று இவை தங்களை காப்பாற்றி கொள்கின்றது. இந்த இரசாயண பதார்த்தத்தின் தன்மை நாம் அன்றாட வாழ்வில் உபயோகிக்கும் அன்டிபயோடிக்ஸை நூறு சதவிகிதம் ஒத்துள்ளது.

எனவே தாடி வைத்திருப்பவர்களின் முகம், இயற்கையாகவே நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கக்கூடிய நுண்ணுயிர்களை கொண்டுள்ளது என்று இந்த ஆராச்சியின் முடிவு தெரிவிக்கிறது.

தாடியை பற்றிய மற்றுமோர் ஆய்வில்:-
இலண்டனில் உள்ள வைத்தியசாலை ஒன்றில் பணிபுரியும் 408 (தாடி வைத்த, தாடி வைக்காத)ஆண்களிடையே அவர்களது தாடைப்பகுதியில் உள்ள நுண்ணுயிர்கள்பற்றி ஆராயப்பட்டபொழுது, தாடி வைத்தவர்களின் முகத்திலுள்ள நுண்ணுயிர்களின் பரம்பல், தாடி வைக்காதவர்களைவிட மிக குறைவாக இருந்ததையும், தாடி வைத்தவர்களின் முகத்திலுள்ள நோய் எதிர்ப்பு சக்தி (Antibiotic) தாடி வைக்காதவர்களிலும் பார்க்க கூடுதலாக இருந்ததும் அவதானிக்கப்பட்டது.

இந்த இரண்டு ஆராய்ச்சிகளிலும், ஆண்கள் தாடி வளர்ப்பது அவர்களது முகத்திற்கு பாதுகாப்பையும், உடம்பிற்கு நோய் எதிர்ப்பு சக்தியையும் அளிப்பதாக இருக்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

References: Dr. Adam Roberts (iris.ucl.ac.uk) sciencedirect.com

“இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ மீசையை நன்கு ஒட்டக் கத்தரியுங்கள். தாடியை வளரவிடுங்கள். புஹாரி ஹதீஸ் (5893).

Leave a Response