குழந்தைகளுக்கு கூட புர்காவா

ஆண்களின் பார்வைகளில் இருந்து தப்பித்துக் கொள்வதற்காக தான் பர்தா (புர்கா) என்று சொன்னீர்கள் அப்படியனில் குழந்தைகளுக்கு எதற்கு புர்கா…

எந்த ஒரு பழக்கமும் குழந்தையில் இருந்து ஊட்டப்பட வேண்டும்! சிறிய வயதில் சினிமா நடிகைகள் போல் உடை அணிய பழக்கி விட்டு பருவ வயதில் பர்தாவை பேணச் சொன்னால் நடக்குமா?

மேலும் பெற்றவர்களின் கண்களுக்கு 18 வயது வரைக்கும் குழந்தைகளாக தெரியலாம்! ஆனால் காமவெறி பிடித்த மிருகங்களுக்கு குழந்தைகளாக தெரிவதில்லை! அன்றாடம் நாம் பார்க்கும் செய்திகள் குழந்தைகளிடம் பாலியல் வன்மங்களை காட்டும் மிருகங்கள் கூடத்தான் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம் என்பதை உணர்த்துகிறது!

அதற்கு காரணம் ஊடகங்கள்! பருவ வயதை அடைவதற்குள் 16000 பாலியல் காட்சிகளை பார்த்து வளர்கின்ற ஒரு தலைமுறைக்கு மத்தியிலும் , பாலியல் வெறியை ஊட்டுகின்ற மது அருந்துவதை நாகரீகமாக கொண்ட சமூகத்திற்கு மத்தியில் தான் வாழ்ந்து வருகிறோம் என்பதை உணர வேண்டும்!

பாலியல் குற்றங்களை தூண்டுவதில் உடைகள் பெரும் பங்கு வகிக்கும் நிலையில் பாதுகாப்பாக இருப்பது தவறா?

வெறிநாய் இருக்கிறது பாதுகாப்பாக செல்லுங்கள் என்றால் நான் அப்படித்தான் செல்வேன் நாய்க்கு புத்தி சொல்லுங்கள் என்பது நல்லதா?

வைரத்தை வாசலில் போட்டு வைப்போம்! யாரும் திருடக் கூடாது என்பது அறிவுடமையா?

மெழுகு சேலை கட்டி நெருப்பின் அருகில் நிற்போம் பற்றக் கூடாது என்பது நியாயமா ?

ஆணை விட பாதுகாப்பு தேவைப்படும் பெண் ஏன் ஆணை விடக் குறைவான ஆடையால் ஆபத்தை தேடிக் கொள்ள வேண்டும்!

சமீபத்தில் ஆடை குறைப்புக்கு பெயர் பெற்ற சினிமா துறையை சேர்ந்த மோனிகா பர்தாவால் ஈர்க்க பட்டு அது தனக்கு பாதுகாப்பும் அமைதியும் தந்ததாக உணர்ந்து இஸ்லாத்தை ஏற்று உள்ளார்!
ஏ‌.ஆர்.ரகுமானின் மகளும் இது பெண்ணடிமைத்தனம் அல்ல என்று கூறி பர்தாவை அணிந்து பல மேடைகளை சந்தித்துள்ளார் இன்னும் இங்கு இருக்கும் முஸ்லிம் பெண்களும் பர்தாவை விரும்பியே அணிகின்றனர்.

Leave a Response