முஸ்லிம் ஆகுவதற்கு எந்த ஒரு சடங்கு சம்பிரதாயங்கள் ஏதுமில்லை. சில விதமான நம்பிக்கைகளும் செயல்பாடுகளால் மட்டுமே உள்ளது.
“மனமாற்றமும் குனம்மாற்றமுமே இஸ்லாம்”
”லாயிலாஹ இல்லல்லாஹ் முஹம்மதுர் ரஸூலுல்லாஹ்”” (வணக்கத்திற்குரிய ஓர் இறைவனை தவிர வேறு எவரும் இல்லை. முஹம்மது நபி(ஸல்) இறைவனின் இறுதி தூதராவார்”” என ஒருவர் வாயால் மொழிந்து மனதால் ஏற்றுக் கொண்டால் அவர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட ஒரு முஸ்லிமாகிறார்.
விளக்க கூறவேண்டுமென்றால், நம்மை படைத்த ஒருவன் இருக்கின்றான் , அவனே அனைத்தையும் படைத்தான். மனிதர்களை படைத்து விட்டு திக்கற்றவர்களாய் விட்டுவிடாமல், நேர்வழி படுத்திட மக்களிலிருந்தே இறைதூதர்களை அனுப்பினான்; குறிப்பிட்ட ஒவ்வொரு சமுதாயத்திற்கும் இறைதூதர்களை அனுப்பியது மட்டும்மல்லாமல் வேதத்தையும் அருளினான்; வேதத்தின்படி இறைதூதர்கள் வாழ்ந்தார்கள; அதன் பக்கம் மக்களையும் அழைத்தார்கள் . இப்ராகிம் (ஆப்ரஹாம்), நூஹ் (நோவா), மூசா (மோசேஸ்), ஈஸா (இயேசு), முஹம்மது (அனைவரின் மீதும் சாந்தி உண்டாகட்டும்) போன்று பல இறைத்தூதர்களை இறைவன் அனுப்பினான். ஒவ்வொரு இறைத்தூதரும் குறிப்பிட்ட சமுதாயத்திற்கு அனுப்பப்பட்டார்கள்; இறுதியாக 1400 வருடங்களுக்கு முன்பு,இறுதி இறைத்தூதராக முஹம்மது நபி ஸல், குறிப்பிட்ட சமூதாயத்திற்கு என்று அல்லாமல் ஒட்டுமொத்த மனித சமூகத்திற்கு அனுப்பபட்டார்கள் .
இன்னும் இறைவன் முதன்முதலில் ஒரு ஜோடியை தான் படைத்தான்; அவர்களிலிருந்து பல்வேறு மக்கள் பல்கி பெருகினர். ஆக அனைவரும் ஓர் தாய் மக்களே! நமக்குள் ஜாதியாலோ நிறத்தாலோ இனத்தாலோ ஏற்றத்தாழ்வு கர்ப்பிப்பது தவறானது . இன்னும் இவ்வுலகில் மனிதர்கள் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் இறைவனிடம் பதில் சொல்லியாகவேண்டும்; குற்றவாளிகள் உலக சட்டத்தில் தப்பித்தாலும் உண்மையான நீதிபதியிடமிருந்து தப்பிக்கமுடியாது. மனிதர்கள் அனைவரும் இறந்த பின்பு மீண்டும் எழுப்பப்பட்டு நியாயந்த்தீர்க்கபடுவோம்;
மேற்கண்ட அடிப்படை கொள்கைகளை மனதார நம்பி பின்பு கீழ்காணும் சாட்சி பகர வேண்டும்.
”வணக்கத்திற்குரியவன் ஓர் இறைவனை தவிர வேறு எவரும் இல்லை.”” என்கிற முதல் பகுதியின் பொருள் வணங்கப்படுதற்குரிய தகுதி ஓர் இறைவனைத்தவிர வேறு எவருக்கும் இல்லை.
இன்னும் கட்டாயத்தின் பேரில் இஸ்லாத்தை ஏற்பது செல்லுபடியாகாது என்பதே இஸ்லாத்தின் நிலைபாடு. இஸ்லாத்தை திணிப்பது மாபெரும் குற்றம் என்பது குறிப்பிடத்தக்கது;
ஆக ஒருவர் இஸ்லாத்தை மனதார ஏற்றுக்கொண்டால், அவர் முஸ்லிம் ஆகிவிடுவார். முஸ்லிமிற்கு ஐந்து கடமைகள் உள்ளன .
இஸ்லாத்தின் ஐம்பெரும் தூண்கள் யாவை?
முஸ்லிம்களின் வாழ்வை நிர்மாணிப்பைவை இஸ்லாத்தின் ஐம்பெரும் தூண்கள். இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளுதல், தொழுதல் ( ஜக்காத் எனப்படும் தர்மம் வழங்குதல் ,ரமலான் மாதத்தில் நோன்பு நோற்றல், உடல் ஆரோக்கியம் மற்றும் பொருளாதார வசதி உள்ளவர்கள் தம் வாழ்நாளில் ஒருமுறையேனும் மக்காவிற்குச் புனிதப் பயணம் மேற்கொள்ளல் , ஆகிய ஐந்து கட்டாயக் கடமைகளும் இஸ்லாத்தின் ஐம்பெரும் தூண்களாகும்.
- இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளுதல்
இறைவன் ஒருவனே! அவனை யாரம் கண்டதில்லை. அவனுக்கு இணை எதுவுமில்லை. அவனுக்கு சந்ததிகளும் இல்லை. அவனுக்கு நிகர் எதுவுமில்லை என்ற இறைவனை குறித்த தெளிவான சிந்தனையுடன், மேற்கண்டவாறு இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வதற்குரிய மிக எளிதான சூத்திரத்தை வாயால் மொழிந்து மனதார உறுதியுடன் ஏற்றுக்கொள்வதை ”ஸஹாதா”” என்று அழைக்கலாம். இவ்வாறு வாயால் மொழிந்து மனதால் நம்பிக்கைக் கொள்ளுதல் இஸ்லாத்தின் முக்கியமான தூண்களில் ஒன்றாகும்.
- தொழுகை
முஸ்லிம்களும் நாள்தோறும் ஐந்து வேளை தொழுகை என்னும் பிரார்த்தனையை மேற்கொள்வார்கள். ஒவ்வொரு தொழுகையும் நடத்தி முடிய ஐந்து நிமிடங்களுக்கு மேல் ஆவதில்லை. தொழுகை என்னும் பிரார்த்தனை இறைவனுக்கும் இறைவனை தொழுபவருக்குமிடையே நேரடித் தொடர்புடையதாகும். இறைவனுக்கும் இறைவனைத் தொழுபவருக்குமிடையே எந்தவித இடைத்தரகரும் கிடையாது. தொழுகை என்னும் பிரார்த்தனையை மெற்கொள்பவர் ஆழ்ந்த மனமகிழ்ச்சியையும் உள்மன அமைதியையும் ஆறுதலையும் பெறுவதோடு இறைவனும் தொழுகை என்னும் பிரார்த்தனையை மேற்கொள்பவர் மீது திருப்திகொள்கிறான்.
பிலால்(ரலி) அவர்கள் முஹம்மது நபி(ஸல்) அவர்களின் அன்புத்தோழர்களில் ஒருவராவார். பிலால்(ரலி); அவர்களிடம் மக்களை தொழுகைக்கு அழைக்கும் பொறுப்பு வழங்கப்பட்டிருந்தது. ஒருமுறை முஹம்மது நபி(ஸல்) அவர்கள் ”பிலாலே! தொழுகைக்காக மக்களை அழையுங்கள். தொழுகையின் மூலம் அனைவரும் ஆறுதல் அடைவோம்”” என பிலால்(ரலி) அவர்களைப் பணித்தார்கள்.
Juna Junaith:
(ஆதார நூல்: அபூ-தாவ10த் – ஹதீஸ் எண்: 4985 அஹமத் – ஹதீஸ் எண்: 22578).
அதிகாலை மதியம் மாலை சூரியன் மறைந்த பின்னர் உள்ள அந்திவேளை இரவு என ஐந்து வேளைகளிலும் மேற்கொள்ளப்படும் கடமையாகும் தொழுகை என்னும் பிரார்த்தனை. சுத்தமான உதாரணத்திற்கு வயல்வெளிகள் அலுவலகங்கள் கல்லூரிகள் என எந்த ஒரு சுத்தமான இடத்திலும் ஒரு முஸ்லிம் தொழுகை என்னும் கடமையை நிறைவேற்றலாம்.
- ஜக்காத் என்னும் தர்மம் வழங்கல் (தேவையுடையோர்க்கு உதவுதல்)
எல்லா பொருட்களும் இறைவனுக்கு சொந்தமானது. இருப்பினும் செல்வங்கள் அனைத்தும் மனித வர்க்கத்திடம் நம்பிக்கையின் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது. ‘ஜக்காத்” என்பதன் உண்மையான பொருள் ‘தூய்மை படுத்துதல்” மற்றும் ‘வளர்ச்சியடைதல்” என்பதாகும். ‘ஜக்காத் வழங்குதல்” என்பது குறிப்பிட்ட பொருட்களின் மீது குறிப்பிட்ட சில சதவீதம் தேவையுடைய குறிப்பிட்ட சில பிரிவினருக்கு வழங்குதல் என பொருள் கொள்ளலாம். ஒருவரிடம் தங்கம் வெள்ளி பணம் மற்றும் செல்வங்கள் இருந்து ஒரு வருடம் (முஸ்லிம் ஹிஜ்ரா ஆண்டு) நிறைவு பெற்று விட்டால் அவைகளின் மீது இரண்டரை சதவீதம் தர்மமாக வழங்க வேண்டும் என இஸ்லாம் கட்டளையிட்டுள்ளது. இவ்வாறு வழங்கும் தர்மம் ‘ஜக்காத்” என்று அழைக்கப்படுகின்றது. இவ்வாறு தர்மமாக வழங்குவதால் நம்முடன் உள்ள பொருட்களும் அதனை வழங்க வேண்டும் என்று எண்ணுகின்ற உள்ளமும் தூய்மைபடுத்தப்படுகின்றது. மேலும் ஒரு மனிதர் தாம் விரும்பிய பொருளை விரும்பிய அளவில் தர்மமாகவோ நன்கொடையாகவோ வழங்குவதையும் இஸ்லாம் ஆதரிக்கின்றது.
- ரமலான் மாதத்தில் நோன்பு நோற்றல்
பிறையை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்படும் இஸ்லாமிய ஆண்டின் ஒன்பதாவது மாதம் ரமலான் மாதமாகும். ஆண்டுதோறும் வரும் ஒவவொரு ரமலான் மாதததின் முப்பது நாட்களிலும் அதிகாலை முதல் சூரியன் மறையும் மாலை நேரம் வரை முஸ்லிம்கள் அனைவரும் உண்ணாமல் பருகாமல் உடலுறவு கொள்ளாமல் இருப்பர். இதற்கு நோன்பு என்று பெயர். இவ்வாறு நோன்பு நோற்பது உடல் ஆரோக்கியத்திற்கு உகந்ததாக இருந்தாலும் நோன்பிருப்பதன் முக்கிய நோக்கம் முஸ்லிம்கள் தாங்கள் கொண்டிருக்கும் இறையச்சத்தை மேலும் பலப்படுத்திக் கொள்வதற்கேயாகும். ஒரு மனிதன் தனக்கு கிடைக்கும் இவ்வுலக சுகங்களை துறப்பது குறை;நத நேரமாக இருந்தாலும் அதன் மூலம் பசித்திருப்பவர்களின் கஷ்டத்தை புரிந்து கொள்வதோடு தனது இறையச்சத்தை வளர்த்துக் கொள்ளும் வாய்ப்பாகவும் அமைகிறது நோன்பு.
- மக்காவிற்கு ‘ஹஜ்” என்னும் புனிதப் பயணம் மேற்கொள்ளல்:
பொருளாதார வசதியும் உடல் ஆரோக்கியமும் கொண்டவர்கள் மக்காவிற்கு ‘ஹஜ்” என்னும் புனிதப் பயணம் மேற்கொள்வது இஸ்லாத்தின் ஐந்து கட்டாயக் கடமைகளில் ஒன்றாகும். ஒவ்வொரு வருடமும் உலகின் அனைத்து நாடுகளிலிருந்தும் சுமார் இருபது லட்சம் முஸ்லிம்கள் சவுதி அரேபியாவிலுள்ள மக்காவிற்கு ‘ஹஜ்” என்னும் புனிதப் பயணம் மேற்கொள்கின்றனர். வருடம் முழுவதும் மக்காவிற்கு முஸ்லிம்கள் மக்காவிற்குச் சென்றாலும் இஸ்லாமிய ஆண்டின் 12வது மாதத்தில் மாத்திரமே இஸ்லாம் கடமையாக்கிய ‘ஹஜ்” என்னும் புனிதப் பயணத்தை மேற்கொள்கின்றனர் முஸ்லிம்கள். ‘ஹஜ்” என்னும் புனிதப்பயணம் மேற்கொள்ளும் அனைவரும் ஒரேவிதமான வெண்ணிற ஆடையணிவது மனிதர்களுக்கிடையே உள்ள ஏற்றத்தாழ்வுகள் இனம் கலாச்சாரம் போன்ற வேறுபாடுகள் அனைத்தையும் களைந்து இறைவனின் முன்னிலையில் அனைவரும் சமம் என்பதை நிரூபிக்கிறது.
இதனைத் தொடர்ந்து ‘ஈதுல்-அல்ஹா” என்னும் பெருநாள் தொழுகை நடைபெறும். ‘ஈதுல்-அல்ஹா” மற்றும் நோன்பு நோற்கும் ரமலான் மாதம் முடிந்ததும் இஸ்லாமியர்களால் கொண்டாடப்படும் ‘ஈதுல் ஃபித்ர்” என்னும் பெருநாள் ஆகிய இரண்டு பெருநாட்களும் இஸ்லாமியர்களால் வருடந்தோறும் கொண்டாடப்படும் மிக முக்கியமான பண்டிகைகள் ஆகும்.