பெண்களுக்கு இஸ்லாம் வழங்கியுள்ள கல்வித்துறை உரிமைகளை பற்றி இங்கு பார்ப்போம். அல் குர்ஆனில் 96 அத்தியாயத்தில் முதல் ஐந்து வசனங்கள் தான் திருக்குர்ஆனில் முதன் முதலில் இறக்கப்பட்ட வசனங்கள், அவ்வசனங்களில் இறைவன் என்ன சொல்கிறேன் என்றால்…
“படைத்த உம்இறைவனின் பெயரைக்கொண்டு ஓதுவீராக! ஒரு தொங்கு சதையிலிருந்து அவனே மனிதனை படைத்தான் ஓதுவீராக! உமிறைவன் கண்ணியமிக்கவன்; அவனே எழுது கோலைக் கொண்டு எழுத்தறிவித்தான். மனிதனுக்கு தெரியாததை எல்லாம் கற்றுக் கொடுத்தான்” (அல்குர்ஆன் 96: 1-5)
இங்கு ஒரு விஷயத்தை மறந்து விடாதீர்கள், 1500 ஆண்டுகளுக்கு முன்னால் நடந்ததை பற்றி நாம் பேசிக்கொண்டுள்ளோம், அக்காலத்தில் பெண்களுக்கு எந்த உரிமையும் கிடையாது ஏதோ சொத்துபத்துகளை போன்று பெண்கள் கருதப்பட்டார்கள் பெண்களுக்கு எழுத்தறிவு பற்றி உலகம் கனவு கூட காணாத காலத்தில் இஸ்லாம், பெண்கள் கல்வி கற்றே ஆக வேண்டும் என வலியுறுத்தியுள்ளது
ஏற்கனவே சொல்லப்பட்டது போல கற்றுத் தேர்ந்த பல பெண்களை சஹாபாக்களில் நாம் பார்க்கலாம். அவர்களின் முதலிடத்தை அன்னை ஆயிஷா (ரலி) வகிக்கிறார்கள் இஸ்லாமிய ஆட்சியாளரான அபூபக்கரின் மகள்; இறை நம்பிக்கையாளர்களின் அன்னை எனும் சிறப்புக்குரியவர் உயர்திரு நபித்தோழர்களும் இஸ்லாமிய ஆட்சி கடிவாளத்தை கையில் ஏந்திய கலீபாக்களும் கூட அன்னை ஆயிஷா அவரை அணுகி வழிகாட்டுதலை பெற்றுள்ளார்கள்.
அன்னை ஆயிஷாவின் முதன்மை சீடராக விளங்கியவர் உர்வா ரலியல்லாஹு அன்ஹு ஆவார். அவர் கூறுவதாவது:
“திருக்குர்ஆன் விரிவுரை, வாரிசுரிமை சட்டங்கள், ஹலால்-ஹராம் அரபு இலக்கியம், அரபுக் கவிதைகள், வரலாறு போன்ற துறைகளில் ஆயிஷா அவர்களை விட புலமை பெற்றவராக யாரையும் நான் கண்டதில்லை”
இஸ்லாமிய சமய நெறியில் மற்றும் அவர் புலமைப் பெற்றிருக்கவில்லை அத்தோடு மருத்துவம் போன்ற உலக அறிவிலும் சிறந்து விளங்கினார் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களைச் சந்தித்து உரையாட வெளியூர்களிலிருந்து தூதுக் குழுக்கள் வரும்போது அவர்களிடையே நிகழும் உரையாடல்களை கவனமுடன் கேட்டு மனதில் பதிய வைத்துக் கொள்வார்.
கணிதத் துறையில் அவருக்கு அளவற்ற ஆர்வம் இருந்தது. நபித்தோழர்களுக்கு வாரிசுரிமை பங்கீட்டில் ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால் ஆயிஷாவிடம் வந்துதான் தமது ஐயங்களை தீர்த்துக் கொள்வார்கள் இம்மாதிரி பல முறை நடந்து இருக்கின்றது ஷரீஅத் அடிப்படையில் ஒவ்வொரு வாரிசும் எவ்வளவு பங்கு கிடைக்கும் என்பதை கணித்துக் கூறுவது ஆயிஷா (ரழி) நிகரற்று விளங்கினார்.
மற்ற நபித்தோழர்களைப் போலவே ஆட்சி கடிவாளத்தை கையில் ஏந்தியிருந்த நான்கு கலிப்பாக்களுக்கும் அவ்வப்போது ஆலோசனை வழங்கும் வாய்ப்பும் ஆயிஷா (ரழி) கிடைத்தது அவர் பலமுறை நபித்தோழர் அபூஹுரைராவுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். ஏறத்தாழ 2210 நபிமொழியை ஆயிஷா (ரழி) அறிவித்துள்ளார்.
நபித்தோழர் அபூமூஸா அஷ் அரி (ரழி) மிகப்பெரிய அறிஞர். “நபித்தோழர்களான எங்களுக்கு ஏதேனும் ஒரு பிரச்சினையில் சரியான தீர்வு கிடைக்காவிட்டால் ஆயிஷாவிடம் சென்று ஆலோசனை கேட்போம் அவர் எங்களுக்கு சரியான விஷயத்தை சுட்டிக்காட்டுவார்” எனக் கூறுகிறார்.
குறைந்தபட்சம் 88 மார்க்க அறிஞர்கள் ஆயிஷாவிடம் பயின்றுள்ளார்கள் அப்படி எனில் ஆயிஷா அவர்களை “ஆசிரியர்களின் ஆசிரியர்” என்று அழைத்தாலும் மிகையாகாது.
அன்னை ஆயிஷாவை தவிர மற்ற ஸஹாபிகளான பெண்மணிகளும் கல்வியில் சிறந்து விளங்கியுள்ளமையை வரலாற்றின் நம்மால் காணமுடிகின்றது
அன்னை ஸஃபியா அவர்களுக்கு இஸ்லாமிய மார்க்க ஞானத்தில் பெரும் புலமை இருந்தது அவர்களுடைய காலத்தில் மிகச் சிறந்த மார்க்க அறிவு பெற்ற பெண்மணியாக அவர் விளங்கினார் என்று அவரைப் பற்றி இமாம் நவவீ குறிப்பிடுகிறார்
இவர்களைப்போன்றே கல்வியிலும் கேள்வியிழும் சிறந்து விளங்கிய இன்னொருவர் அன்னை உம்மு ஸலமா (ரழி) ஆவார். அவரிடம் மட்டும் 32 மார்க்க அறிஞர்கள் மாணவர்களாக பயின்றுள்ளனர் என்ன அல்லாமா இப்னு ஹஜர் ரஹ்மத்துல்லாஹி குறிப்பிடுகிறார்.
ஃபாத்திமா பின்த் கைஸ் (ரழி) அவர்களைப் பற்றியும் வரலாற்றில் ஒரு குறிப்பு காணக் கிடைக்கின்றது ஒருமுறை ஏதோ ஒரு பிரச்சினையில் அவருக்கும் ஆயிஷா (ரழி) மற்றும் உமர் (ரழி) அவர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது நாள் முழுக்க விளக்கியும் பாத்திமாவை ஒப்புக்கொள்ள வைக்க அவர்கள் இருவராலும் இயலவில்லை.
புலம்பெயர்ந்து சென்ற தொடக்ககால முஹாஜிர்களில் பாத்திமாவும் ஒருவர் விசாலமான அறிவு பார்வை உடையவர் என அவரைப் பற்றி இமாம் நவவி கூறியுள்ளார்.
அனஸ் அவர்களின் தாயான உம்மு சுலைம் அவர்களும் மிகப்பெரும் அறிஞராக விளங்கினார் இறைவனின் பக்கம் மக்களை அழைக்கும் தாவா பணியில் அவருக்கு மிகுந்த ஈடுபாடு இருந்தது
ஹஸன் (ரழி) அவர்களுடைய பேத்தியான ஸஈதா நஃப்ஸியா ரஹிமஹுல்லாஹ் அவர்களிடம் கூட இமாம் ஷாபி மாணவராக இருந்து கல்வி கற்றார் இஸ்லாமிய மார்க்க அறிவில் தலைசிறந்த முன்னோடியாக திகழ்ந்தவர் இமாம் ஷாபி அவர்கள் உலகில் பின்பற்றப்படும் நான்கு இஸ்லாமிய வழிபாட்டைகளில் அவருடையதும் பிரதானமானதொன்று.
இவர்களை போன்று இன்னும் பல ஸஹாபியப் பெண்மணிகள் வரலாற்றில் மின்னுவதை பார்க்க முடியும் உதாரணமாக உம்மு தர்தா (ரழி), அபுத் தர்தாவின் மனைவியான இவர் அறிவார்ந்த கருத்துக்களை அழகாக வெளிப்படுத்துவதில் சிறந்து விளங்கினார்.
இமாம் புகாரி போன்றோரே அவருடைய அறிவை வியந்து பாராட்டியுள்ளனர்
இது போன்ற எண்ணற்ற உதாரணங்களை கூறமுடியும் பெண்கள் படு மோசமாக நடத்தப்பட்ட ஒரு காலகட்டம் அது என்பதை மறந்துவிட வேண்டாம் வீட்டில் பெண் குழந்தை பிறந்தால் உயிரோடு குழிதோண்டிப் புதைத்து வந்த காலகட்டம் அது முஸ்லிம் பெண்கள் அக்காலகட்டத்தில் இஸ்லாமிய அறிவில் மட்டுமல்லாது மருத்துவம் விஞ்ஞானம் போன்ற துறைகளிலும் தமது சுவடுகளை பதித்து உள்ளதையும் காண முடிகின்றது.
பெண்கள் கட்டாயம் கல்வி கற்க வேண்டும் என இஸ்லாம் வலியுறுத்தியது தான் இதற்கெல்லாம் ஒரே காரணம் இதைப்பற்றி நீங்கள் என்னதான் கருதுகிறீர்கள்?