இஸ்லாம் பெண்களுக்கு வழங்கிய பொருளாதார உரிமைகள்

பெண்களுக்கு இஸ்லாம் வழங்கியுள்ள ஆன்மீக உரிமைகளையும், ஒழுக்க உரிமைகளையும் கடந்த அத்தியாயத்தில் பார்த்தோம். இஸ்லாம் பெண்களுக்கு வழங்கியுள்ள சமய மார்க்க உரிமைகளையும் சலுகைகளையும் கண்டு வந்தோம். இஸ்லாம் பெண்களுக்கு வழங்கியுள்ள பொருளாதார உரிமைகளைப் பற்றி இந்த அத்தியாயத்தில் பார்ப்போம்.

இஸ்லாம் பெண்களுக்கு பொருளாதார விஷயத்தில் எந்த அளவுக்கு சுதந்திரம் வழங்கியுள்ளது என்றும் பார்ப்போம் ⃣நம்முடைய கவனத்தைக் கவருக்கின்ற முதல் விஷயம், இஸ்லாம் இன்றைக்கு ஏறக்குறைய ஆயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்னாலேயே, பெண்களுக்கு பொருளாதார உரிமைகளை வழங்கி விட்டிருக்கின்றது என்பதே பல்வேறு வகைப்பட்ட உரிமைகளை அவை தமக்குள் கொண்டிருக்கின்றன. உதாரணமாக ஒரு பெண் அவள் கல்யாணமாகத கன்னிப் பெண்ணாகவும் இருக்கலாம், கல்யாணமான மங்கையாகவும் இருக்கலாம், சுயவிருப்பத்தில் தன்னுடைய சொத்தை தான் விரும்பிய வழியில் செலவழிக்கலாம் விரும்பிய பொருட்களையோ சொத்தையோ நிலத்தையோ வாங்கலாம் விற்கலாம். தனக்கு உரிமையான பொருட்களைக் கொண்டு ஓர் ஆண் என்னவெல்லாம் செய்ய முடியுமோ அவை அனைத்தையும் ஒரு பெண் செய்ய்யலாம் எல்லாவகையான உரிமையும் அவளுக்கு உண்டு  ⃣தன்னுடைய சொத்தை தான் நினைத்த வழிகளில் பயன்படுத்திக் கொள்ளலாம் எனும் உரிமையை இஸ்லாம் பெண்களுக்கு ஆயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்னாலேயே, வழங்கிவிட்டது.

ஆனால் இவ்வுரிமையை பிரிட்டிஷ் அரசாங்கம் 1870ஆம் ஆண்டில் தான் பெண்களுக்கு வழங்கியது ஆயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்னாலேயே இவ்வுரிமையை இஸ்லாம் பெண்களுக்கு வழங்கி விட்டதால், இவ்வுரிமையை காலங் கடந்த பழைய உரிமை என்று கூட சொல்லலாம். ஆயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்னாலேயே வழங்கப்பட்டுவிட்டதால் இவ்வுரிமை இன்று தேவை இல்லை என்றாகிவிடுமா காலம் கடந்தாகிவிடுமா நவீன உலகத்தில் இவ்வுரிமை தேவையே இல்லாமல் போய்விடுமா வேலைக்கு சென்று வருமானம் ஈட்டுவதைப் பொறுத்த மட்டிலும் , இஸ்லாம் அவ்வுரிமையையும் பெண்களுக்கு வழங்கியுள்ளது. வேலைக்கு போக கூடாது என்று எங்குமே குர்ஆனோ ஹதீதோ குறிப்பிடவே இல்லை. ஷரீஅத்தின் வட்டத்திற்குள் வேலை அமைய வேண்டும் ஷரீஅத் விரும்புகின்ற நடைமுறைகளைக் கைக்கொள்ள வேண்டும் அவ்வளவே அவற்றிலும் குறிப்பாக பர்தாவோடு வேலைக்குச் செல்ல வேண்டும். ⃣ஆனால் ஒரு விஷயத்தை நினைவில் கொள்ள வேண்டும் பெண்ணுடைய அழகையும் கவர்ச்சிசியையும் வெளிப்படுத்தும் எத்தகைய வேலையையும் இஸ்லாம் ஒருக்காலும் அனுமதிப்பதில்லை. நடிப்பு, நடனம் மாடலிங் அல்லது, இவை போன்ற வேறு வேலைகள் தன்னுடைய அழகையோ மென்மையையோ வெளிப்படுத்தி பிறரை ஈர்த்து சம்பாதிக்கும் எந்த வேலையனாலும் அதை செய்ய இஸ்லாம் அனுமதிப்பதே இல்லை.

⃣ஒரு சில வேலைகளையே ஹராம் (செய்ய்ய கூடாது) என்று இஸ்லாம் கட்டம் கட்டியுள்ளது அவ்வேலைகளை ஆண்களே செய்ய கூடாது அப்படியிருக்கும் போது அவ்வேலைகளை பெண்கள் செய்வதற்கு கண்டிப்பாக அனுமதி இல்லை.

மது,வியாபாரம், சூதாட்டம் கிளப் போன்ற வேலைகள் இவற்றை செய்ய ஆண்களுக்கே அனுமதி கிடையாது தூய்மையானதோர் இஸ்லாமிய சமூக அமைப்பில் பலதரப்பட்ட வேலைகளை எளிதாக முஸ்லீம் பெண்கள் கைக்கொள்ள முடியும் மருத்துவ துறையையே எடுத்துக்கொள்ளுங்களேன் பெண்களுக்கு மருத்துவம் பார்ப்பதற்கு பெண் மருத்துவ நிபுணர்களும் பெண் நர்ஸுகளும் நமக்கு தேவைப்படுகிறார்கள் அவ்வாறே கல்வி துறையிலும் பெண்களுடைய பங்களிப்பு மிக அதிகமாகத் தேவைப்படுகின்றது. ⃣இன்னொருப்பக்கம் பார்த்தீர்களென்றால் பொருளாதாரம் சார்ந்த எல்லா பொறுப்புகளையும் இஸ்லாம் ஆண்களின் மீதே சுமதியுள்ளது. குடும்பம் நடத்தத் தேவையான வருமானத்தை ஈட்டுகின்ற பொறுப்பை ஆண்களின் மீது சுமதியுள்ளதே ஒழிய பெண்கள் மீது அப்பபொறுப்பை இஸ்லாம் சுமத்தவில்லை. வேறு வார்த்தைகளில் சொல்வவதென்றால் தன்னுடைய சொந்த வாழ்க்கையை நடத்தத் தேவையான பொருளைக்கூட அவள் தானாக ஈட்ட வேண்டியதில்லை???????? ஒரு வேளை சூழ்நிலை மாறிப்போய் வெளியே சென்று சம்பாதித்தே ஆக வேண்டும் என்று கட்டாயத்திற்கு ஒரு பெண் தள்ளப்பட்டால் அவளை ஒரு போதும் இஸ்லாம் தடுத்து நிறுத்துவதில்லை???????? முன்னே நாம் குறிப்பிட்ட வேலைகள் அல்லாமல் பெண்கள் வேறு பல வேலைகளையும் செய்யலாம் தன்னுடைய வீட்டில் இருந்தவாறும் அவள் பலவேறு பணிகளை மேற்கொண்டு சம்பாதிக்கவும் செய்யலாம் ???????? ????தொழிற்சாலைகள் மற்ற அலுவலக வேலைகளை பொறுத்தமட்டில் நாம் ஏற்கனவே குறிப்பிட்ட இஸ்லாமிய வரம்புகளை கண்டிப்பாக பேணியாக வேண்டும். அவ்வாறு அவ்வரம்புகளை பேணி சம்பாதிக்க முடியும் என்றால் இஸ்லாம் அனுமதிக்கவே செய்கிறது

ஆண்களும்???????? பெண்களும் வேலை செய்யும் பிரிவுகள் தனி தனியாகவே இருக்க வேண்டும் பர்தாவை கட்டாயம் பேண வேண்டும் ஆண்களும் பெண்களும் சமூக வாழ்வில் கலப்பதை ஒரு போதும் இஸ்லாம் வரவேரற்பதில்லை???????? அவ்வாறே வியாபார வனிகத்துறையில் பெண்கள் ஈடுபடுவதை இஸ்லாம் தடை செய்யவில்லை???? எனினும் அந்நிய ஆண்களை சந்திக்க வேண்டும் அவர்களோடு வியாபாரம் செய்தாக வேண்டும் அல்லவா அச்சமயங்களில் திருமண உறவு தடை செய்யப்பட்ட ஆண்களான தந்தை மகன் கணவர் போன்றோரின் துணையையும் அவர்களது ஒத்தாசையையும் பெற்று கொள்ள வேண்டும் இந்த நிபந்தனைகளோடு வியாபாரத்தில் ஒரு பெண் குறிப்பிட்ட அளவு ஈடு பட முடியும் என்றால் அதை இஸ்லாம் அனுமதிக்கின்றது ???????????????? ????????????????முஃமீன்களின் அன்னையான கதீஜா ரலியல்லாஹு அன்ஹா அவர்களை நாம் இங்கு முன்மாதிரியாக எடுத்துக்கொள்ளலாம் மக்கா மாநகரில் அவர்கள் புகழ் பெற்ற வியாபாரப் பெண்மணியாகக் விளங்கினார்கள் ஆனால் அவர்களது வியாபாரத்தை அவர்கள் சார்பாக அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மேற்கொண்டு வந்தார்கள் ⃣நன்கு உன்னிப்பாக பார்த்தீர்கள் என்றால் குடும்பத்தில் பெண்ணுக்குரிய பொருளாதார பாதுகாப்பை,இஸ்லாம் வழங்கியுள்ளது ஏற்கனவே சொன்னதைப் போல சம்பாதிக்கும் சுமையை பெண்ணின் மீது இஸ்லாம் சுமத்தவில்லை குடும்பத்துக்குத் தேவையான பொருளை சம்பாதிப்பதை இஸ்லாம் அக்குடும்ப ஆண்களின் மீதே வித்தியாக்கியுள்ளது???????? ⃣திருமனத்த்திற்கு முன்பு ஒரு பெண்ணின் தேவைகளை நிறைவு செய்யும் பொறுப்பு அவளுடைய தந்தையையும்???????? அவளுடைய சகோதரர்களையும்???????? சார்ந்தது தங்களால் முடிந்த வரை அவளுடைய தேவைகளை அவர்கள் நிறைவேற்றியே ஆக வேண்டும். ⃣ திருமணத்திற்குப் பிறகு இப்பொறுப்பு அவளுடைய கணவனைச் சேருகின்றது அவளுக்கு தேவையான உணவு, உடைகள், இருப்பிடம், அவளுடைய பாதுகாப்பு ஏற்பாடுகள் போன்றவற்றை அவளுடைய கணவன் செய்தே ஆக வேண்டும் கணவன் இறந்து விட்டால் அவளுடைய மகன் இப்பொறுப்பை ஏற்க வேண்டும் பொறுப்புகளை சுமக்க வேண்டிய ஆண் ஒருவர் உயிரோடு இருக்கும் வரை எல்லா பொறுப்புகளையும் அவனே சுமந்தாக வேண்டும். ⃣ அப்பெண்ணுக்கு எந்த பொறுப்பும் கிடையாது அவளாக இஷ்டப்பட்டு ஏதேனும் வேலை செய்து சம்பாதித்தாலும் அதை அந்தக் குடும்பத்திற்கு செலவு செய்ய வேண்டும் என்ற அவசியம் கிடையாது அவள் தான் சம்பாதித்ததை யாருக்கு வேண்டுமானாலும் கொடுக்கலாம் என்ன வேண்டானாலும் செய்யலாம் ⃣கல்யாணத்தை எடுத்துக் கொண்டாலும் இஸ்லாமிய நியதிகள் சரியாக பின்பற்றப்படும் ஒரு திருமனத்தில் பெண்ணே பயனாளியாக இருக்கிறாள் அவள் தனக்குத் தேவையான மஹரை வரப்போகின்ற கணவரிடமிருந்து கேட்டுப் பெற்றுக்கொள்கிறாள்???? மனப்பூர்வமாக பெண்ணுக்குத் தர வேண்டிய திருமனக் கொடையைக் கொடுத்து விடுங்கள் அவளாக ஏதேனும் அதிலிருந்து உங்களுக்கு அளித்தால் அதை விருப்போடு அனுபவியுங்கள் அல் குர்ஆன் : ????மஹர் என்று அழைக்கப்படும் திருமனக்கொடை இஸ்லாமில் முக்கியமானது. அது இல்லாமல் திருமணமே செல்லுபடியாகாது நம்முடைய இஸ்லாமிய சமூகத்தில் இந்த மஹர் நடைமுறையிலேயே இல்லை என்பதை வேதனையோடு குறிப்பிடுகிறேன்????????‍ ????????லட்சக்கணக்கில் செலவு செய்து நடத்தடப்படும் திருமணங்களில் நூறு ரூபாய் இரு நூறு ரூபாய் மஹர் எழுதப் படுகின்றது ????????‍ ⃣இவ்வளவுதான் மஹர் கொடுக்க வேண்டும் என்று எந்த வரை முறையையும் இஸ்லாம் ஏற்படுத்தவில்லை அதிகபட்ச அளவையோ குறைந்த பட்ச அளவையோ தீர்மானிக்கவில்லை எனினும் இரண்டு குடும்பத்தாருடைய பொருளாதார நிதீ சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு மஹர் தீர்மானிக்கப்படவேண்டும் ஐநூற்றி ஒரு ரூபாய் ஆயிரத்தி ஒரு ரூபாய் என்றெல்லாம் எழுதுவது இஸ்லாமையே கேவளப்படுத்துவதற்கு ஒப்பாகும் இந்தியா பாக்கிஸ்தான் போன்ற நாடுகளில் முஸ்லிம்கள் பிற சமூக கலாச்சாரத்துக்கு பலியாகிபோய் விட்ட காரணத்தால் மஹர் விஷயத்தில் மிக கீழ்த்தரமான வேடிக்கை கூத்துகள் எல்லாம் நிகழுக்கின்றன மஹரை ஆக குறைவாக தீரமானிக்கிறார்கள் அதே சமயம் வர போகின்ற மணப்பெண் ஏகத்துக்கும் சீர்சாமன்களை அள்ளிக்கொண்டு வர வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள் டிவி, பிரிட்ஜ், தூங்கும் கட்டில்,அவ்வளவு ஏன் சாப்பிட பயன்படுத்தும் தட்டயும் கிளாஸையும் கூட பெண் வீட்ட்டிலிருந்து வாங்கி க் கொள்கிறார்கள் ⃣தங்களுடைய வசதிக்கு ஏற்ப்ப மஹர் கொடுக்க வேண்டும் என்னும் சிந்தனை மாப்பிள்ளை வீட்டார்களுக்கு எழுவதில்லை ஆனால் தங்களுடைய வசதிக்கு ஏற்றவாறு சீதனத்தை மட்டும் எதிர்பார்க்கிறார்கள் என்ன கொடுமை இது படிப்புக்கேற்ற வேலை என்பது போல படிப்புக்கேற்ற கூலி (வரதட்சணை) என்பதும் தொடருக்கின்றது ஒரு லட்சம் இரண்டு லட்சம் முன்று லட்சம் என்று தகுதி கேற்ப மார்க்கட்டே ரேட்டை நிர்ணயம் செய்துவிடுகின்றது படிக்காத மாப்பிள்ளைக்கு இவ்வளவு படித்த மாப்பிள்ளைக்கு கிராஜு வேட்டுக்கு போஸ்ட் கிராஜூ வேட்டுக்கு வெளிநாட்டு மாப்பிள்ளைக்கு என்று ஒவ்வரு மாப்பிள்ளைக்கும் ஒரு விலை

வரதட்சணைக்கும் இஸ்லாமுக்கும் எள்ளளவும் சம்மந்தம் இல்லை நேரடியாகவோ மறைமுகமாகவோ வரதட்சணை வாங்குவதை இஸ்லாம் ஆதரிக்கவில்லை எந்தவித நெருக்கடிக்கும் ஆளாகாமல் பெண்ணின் தந்தை தானாக விருப்பப்பட்டு ஏதேனும் அன்பளிப்புகளை வழங்கினால் ஏற்றுக்கொள்ளலாம். ⃣ சமூக பழக்கவழக்கங்களும் மறைமுக நெருக்கடியை தருகின்றன இஸ்லாம் இதை ஒரு போதும் அனுமதிப்பதில்லை ⃣திருமணத்தின் போது தான் பெற்ற மஹரை ஒரு பெண் தன்னிஷ்டப்படி என்ன வேண்டுமானாலும் செய்யலாம் எங்கு வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம் அதில் இருந்து கிடைக்கின்ற பங்கு பணத்தை அவள் கணவனுக்கோ கணவனின் குடும்பதிற்க்கோ தந்தாக வேண்டிய அவசியமில்லை ???? ????வருமானம் ஈட்ட வேண்டிய தேவை பெண்ணுக்கு அறவே இல்லை அப்படியே சம்பாதித்தாலும் அது முழுக்க முழுக்க அவளுக்கே சொந்தம் தன்னுடைய வீட்டார்க்காக ஒரு நயா பைசவயும் அவள் செலவழிக்க வேண்டியதில்லை தான் விரும்பியபடி எங்கு வேண்டுமானாலும் எதற்க்காக வேண்டுமானாலும் அவள் அதை செலவழிக்கலாம் ????????மனைவி என்னதான் பணக்காரியாக இருந்தாலும் வசதி படைத்தவளாக இருந்தாலும் அவளுக்கான உணவையும் இருப்பிடத்தையும் ஆடைகளையும் அளிப்பது கணவன் மீதே கடமை ஆகும் இதுதான் இஸ்லாமிய நியதி வருமானம் ஈட்டுவதை இஸ்லாம் ஆணின் மீதே கடமையாக்குகின்றது அக்கடமையை அவன் எப்பாடு பட்டாவது நிறைவேற்றி ஆக வேண்டும் ⃣மனைவிக்கு தலாக் கொடுத்து பிரிய நினைத்தாலும் ‘இத்தா’ வின் காலத்தில் அவளுக்கான செலவுகளை கணவனே அளித்தாக வேண்டும் பிள்ளைகள் இருந்தால் அவர்களுக்கான எல்லா செலவுகளையும் கணவனே அளிக்க வேண்டும் பல நூற்றாண்டுகளுக்கு முன்பாகவே இஸ்லாம் பெண்ணுக்கு வாரிசுரிமையை வழங்கிவிட்டது குர் ஆ னை வாசித்துப்பார்த்தால் அல்பகறா அந்நிஸா அல்மாஇதா போன்ற அத்தியாயங்களில் ஒரு பெண் மனைவி எனும் நிலையில் தாய் எனும் நிலையில் மகள் எனும் நிலையில் எவ்வளவு பங்கை சொத்தில் இருந்து பெறுகிறாள் என்பது தெளிவாக விளக்கப்பட்டுள்ளதைக் காண்பீர்கள் அவர்களுகான பங்கு விகிதத்தை அல்லாஹ் குர் ஆனிலேயே விளக்கி விட்டான்

Leave a Response