இஸ்லாம் பன்றி இறைச்சியை உணவாக உட்கொள்ளத் தடை செய்திருப்பது ஏன்?

கேள்வி : இஸ்லாம் பன்றி இறைச்சியை உணவாக உட்கொள்ளத் தடை செய்திருப்பது ஏன்?

பதில்:இஸ்லாம் பன்றி இறைச்சியை உணவாக உட்கொள்ள தடை செய்துள்ளது இது ஏன் . என்பது சிலருக்கு தோணலாம் இறைவன் ஒரு விஷயத்தை தடை செய்தால் அது நம் நன்மைக்கு தான் என்று இதன் விளக்கத்தை படிக்கும்போது நீங்கள் அறியலாம் 

பன்றி இறைச்சி உண்பது தடை செய்யப்பட்டிருப்பது பற்றி அருள்மறை குர்ஆனில் குறைந்தது நான்கு அத்தியாயங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2:173 اِنَّمَا حَرَّمَ عَلَيْکُمُ الْمَيْتَةَ وَالدَّمَ وَلَحْمَ الْخِنْزِيْرِ وَمَآ اُهِلَّ بِهٖ لِغَيْرِ اللّٰهِ‌ۚ فَمَنِ اضْطُرَّ غَيْرَ بَاغٍ وَّلَا عَادٍ فَلَاۤ اِثْمَ عَلَيْهِ‌ؕ اِنَّ اللّٰهَ غَفُوْرٌ رَّحِيْمٌ‏ 
2:173. தானாகவே செத்ததும், இரத்தமும், பன்றியின் மாமிசமும், அல்லாஹ் அல்லாத பெயர் சொல்லப்பட்டதும் ஆகியவைகளைத்தான் உங்கள் மீது ஹராமாக ஆக்கியிருக்கிறான்; ஆனால் எவரேனும் பாவம் செய்யாத நிலையில் – வரம்பு மீறாமல் (இவற்றை உண்ண) நிர்ப்பந்திக்கப்பட்டால் அவர் மீது குற்றமில்லை; நிச்சயமாக அல்லாஹ் கருணைமிக்கோனும், மன்னிப்பவனுமாக இருக்கின்றான்.(அல்-குர்ஆன் 2:173)

மேலும் அல்குர்ஆன்5:3,6:145,16:115 

பன்றி இறைச்சி உண்ணத் தடை என்று பைபிளும் குறிப்பிடுகின்றது:

கிறஸ்தவர்களின் வேத புத்தகமான பைபிள் குறிப்பிடும் தடைகளைப் பற்றி கிறிஸ்தவர்களுக்கு எடுத்துச் சொன்னால் அவர்களும் அறிந்து கொள்வார்கள்..
பைபிளின் லெவிட்டிக்கஸ் (Leviticus) 11:7-8, 
டியுட்டர்னோமி (Deuteronomy) 14:8 
புக் ஆஃப் இஷையா (Book of Isaiyah) 65:2-5

பன்றி இறைச்சி உண்பதால் – மனிதனுக்கு ஏராளமான நோய்கள் உண்டாகின்றன:

எந்த விஷயத்தையும் முஸ்லிம் அல்லாதவர்களும் கடவுளே இல்லை என்று மறுப்பவர்களும் காரணத்துடனும் தர்க்க ரீதியாகவும் அறிவியல் உண்மையுடனும் சொன்னால்தான் ஏற்றுக் கொள்வார்கள். பன்றி இறைச்சி உண்பதால் மனிதனுக்கு 70விதமான நோய்கள் உண்டாகிறது. பன்றி இறைச்சி உண்பதால் மனிதனின் வயிற்றில் 

1.வட்டப்புழு (RoundWorm) :
இதன் சீரணக் கோளாறுகள், அப்பென்டிக்ஸ், கொடுமையான மஞ்சள் காமாலை ஆகியவை ஏற்படுகின்றன.

2.கொக்கிப்புழு (HookWorm) :
இதன் மூலம் அனிமியா, ஒடிமியா, இதயம் செயலிழப்பு, மூளை மற்றும் உடல் வளர்ச்சி குன்றுதல், காசநோய், வயிற்றுப்போக்கு, டைபாய்டு ஆகியவை ஏற்படுகின்றன.

3.சிடோசோமா ஜபானிகம் :
புது உயிராக உருவாகும் பெண் உயிரணுவானது மூளை அல்லது முதுகுத்தண்டில் தங்கிவிட்டால், பக்கவாதமும் மரணமும் கூட ஏற்படலாம். மேலும் இரத்தம் வெளியேற்றம், அனிமியாவும் உண்டாகும்.

4.பாரகோமினஸ் வெஸ்டர்மைனி:
இந்நோய் தாக்கப்பட்டவருக்கு நுரையீரலில் இரத்தம் வடியும்.

5.பேசியோ லெப்சிஸ் புஸ்கி :
சீரணக் கோளாறுகளை ஏற்படுத்தி நிரந்தரமான வயிற்றுப்போக்கை இது ஏற்படுத்தும்.

6.குளோராநார்சிஸ் சினன்சிஸ்:
இதனால் கொடுமையான மஞ்சள் காமாலையும் நுரையீரல் பெரிதாவதும் ஏற்படும்.

7.மெட்டாஸ்ரோன்கிலஸ் அப்ரி:
இது சுவாசக்கோளாறையும் நுரையீரல் கட்டியையும் ஏற்படுத்தும்.

8.கிகன்தொரின்கஸ் கிகஸ்:
அனிமியாவையும் சீரணக் கோளாறுகளையும் ஏற்படுத்தும்.

9.பலடிடியம் கொலி:
இது வயிற்றுப்போக்கையும் பொதுவான பலவீனத்தையும் உண்டாக்கும்.

பன்றி இறைச்சி உண்பதால் மனிதனின் வயிற்றில் நாடாப்புழு உருவாகிறது. இந்த நீளமான நாடாப்புழு மனித குடலின் அடிப்பகுதியில் சென்று தங்கிவிடுகிறது. 
ஆது இடும் முட்டை இரத்த நாளங்கள் வழியாக உடலின் எல்லாப் பாகங்களுக்கும் பரவுகிறது. 
இந்த முட்டை மனித மூளையச் சென்றடைந்தால் மனிதன் தன் நினைவாற்றலை இழப்பான். 
இந்த முட்டை மனித இதயத்தைச் சென்றடைந்தால் மனிதனுக்கு மாரடைப்பு உண்டாகிறது. 
இந்த முட்டை மனிதனின் கண்களைச் சென்றடைந்தால் மனிதன் கண்பார்வையை இழக்கிறான்.
இந்த முட்டை மனிதனின் ஈரலைச் சென்றடைந்தால் மனிதனின் ஈரல் பாதிக்கப்படுகிறது. 
இவ்வாறு பன்றி இறைச்சி உண்பதால் மனித வயிற்றில் உருவாகும் நாடாப்புழுவின் முட்டைகள் மனித உருப்புகள் அனைத்தையும் செயலிழக்கச் செய்யும் வல்லமை உள்ளவை.

பன்றி இறைச்சியில் திரிகூரா திச்சுராஸிஸ் (Trichura Tichurasis) என்ற பெயரையுடைய மற்றொரு ஆபத்தான குடற்புழு உள்ளது. பன்றி இறைச்சியை நன்றாக வேக வைத்துவிட்டால் இது போன்ற புழுக்கள் மரணித்து விடுகின்றன என்பது ஒரு பொதுவான அதே சமயம் தவறான கருத்து மக்களிடையே இருக்கிறது. இது பற்றிய ஆய்வு ஒன்று அமெரிக்காவில் நடத்தப்பட்டபோது – இருபத்து நான்கு பேர் திரிகூரா திச்சுராஸிஸ் (Trichura Tichurasis) என்று குடற்புழு நோயால் தாக்கப்பட்டிருந்தார்கள். அவர்களில் இருபத்தி இரண்டு பேர் பன்றி இறைச்சியை நன்றாக வேகவைத்து சாப்பிட்டவர்கள் என்று கண்டறியப்பட்டது. சாதாரணமான வெப்பத்தில் சமைக்கப்படும் பன்றி இறைச்சியில் – குடற்புழு உண்டு என மேற்படி ஆய்விலிருந்து நாம் அறியும் செய்தி

பன்றி இறைச்சியில் கொழுப்புச் சத்து அதிகம்:

பொதுவாக உணவுகளில் அதிகமான கொழுப்பு இருக்கும் போது அது மனித உடலுக்குக் கேடு செய்கிறது. குறிப்பாக இதய நோயாளிகளுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
இதய நோயாளிகள் ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி ஆகியவற்றைக் கூட உண்ண வேண்டாம் என்கின்றனர்.
100 கிராம் ஆட்டிறைச்சியில் 17 கிராம் கொழுப்பு உள்ளது. 
100 கிராம் மாட்டு இறைச்சியில் 5 கிராம் கொழுப்பு உள்ளது. 
ஆனால் 100 கிராம் பன்றி இறைச்சியில் 50 கிராம் கொழுப்பு உள்ளது.
சரி பாதி கொழுப்பு உள்ள பன்றியின் இறைச்சி நிச்சயம் நல்ல உணவாக இருக்க முடியாது.
பன்றி இறைச்சி உண்பதால் ஏற்படும் கொழுப்புச் சத்து மனித இரத்த நாளங்களை அடைத்து விடுவதால் – மனிதனுக்கு இரத்த அழுத்த நோயும் – மாரடைப்பும் உண்டாகின்றது. எனவே அமெரிக்கர்களில் ஐம்பது சதவீதம் பேர் இரத்த அழுத்தம் உள்ளவர்களாக இருப்பதில் ஆச்சரியம் இல்லை. 

பன்றியில் வெளிப்பட்டுள்ள தற்கால வைரஸ்கள் :

1.PRRS — இது நம்மைத் திடுக்குறச் செய்யும் நோய். 2001இல்தான் முதல் தடவையாக இதுபற்றி தெரிய வந்தது. 1980 முதல் பல நாடுகளில் இதை காத்துக் கருப்பு, பேய் என்று நினைத்து வந்தார்கள். இரவில் வந்து அமுக்கும், உதைக்கும் என்றார்கள். இதிலுள்ள மர்மத்தை மருத்துவ உலகம் அறிந்த பிறகு இதற்கு”Porcine Reproductive and Respiratory Syndrome” (PRRS) என்று பெயர் சூட்டியது. அமெரிக்காவில் இந்நோய் ஏற்பட 75 சதவீத காரணம் பன்றி மந்தைகளே என்று தெரிய வந்துள்ளது.

2.நிஃபா வைரஸ் – 1999இல் கண்டுபிடிக்கப்பட்டது.இந்த நிஃபா வைரஸ் விலங்குகள் மற்றும் மனிதர்கள் இரண்டு சாராரையும் தாக்குகின்றன. குறிப்பாக விலங்குகளால்தான் இது ஏற்படுகிறது. மனிதர்களில் இந்த வைரஸ் மரணத்தையும் ஏற்படுத்துகின்றன. மூளையில் எரிச்சலை ஏற்படுத்தும். 2000இல் இந்த வைரஸ் குறித்து அறிக்கை தரப்பட்டது.சிடிசி புள்ளிவிவரப்படி இது 2004இல் திரும்பவும் காணப்பட்டது என்று கூறப்படுகிறது.

3.Porcine Endogenous Retrovirus (PERV) – லான்சட் எனும் மருத்துவ இதழ் ஆய்வுப்படி இந்த வைரஸ் பரவக் காரணம் பன்றியின் உறுப்புகளை மாற்றாகப் பயன்படுத்துவதே என்று தெரிய வருகிறது. இதனால் மனிதர்களின் செல்கள் பாதிக்கப்படுகின்றன. பன்றியின் இதயம், மண்ணீரல், சிறுநீரகம் ஆகியவற்றை மனிதர்கள் உறுப்பு மாற்றத்தில் பயன்படுத்திக்கொள்வதால் இந்த வைரஸ் பரவுகிறது.

4.Menangle Virus – இது 1997இல் கண்டுபிடிக்கப்பட்டு, 1998இல் அறிக்கை தரப்பட்டது. இந்தப் புதிய வைரஸ் பன்றியில் உருவாகி மனிதர்களிடம் தாவிவிடுகிறது. ஆஸ்திரேலியாவில் பன்றி மந்தையில் பிண்டங்களான பன்றிகள் பிறந்ததால் இந்த வைரஸ் பரவியது.


உலகில் உள்ள மிருகங்களில் எல்லாம் கேடுகெட்ட மிருகம் பன்றி:

பூமியல் உள்ள விலங்கினங்களில் எல்லாம் கேடுகெட்ட விலங்கினம் பன்றி. பன்றி சேற்றிலும் சகதியிலும் மலத்திலும் வாழக்கூடிய விலங்கினம். கடவுளின் படைப்பில் ஒரு சிறந்த சுத்திகரிக்கும் மிருகம் பன்றி. நவீன கழிப்பறை வசதி இல்லாத கிராமப்புறங்களில் மனிதர்கள் – காடுகளிலும் – வெட்டவெளியிலும்தான் மலஜலம் கழிப்பார்கள். இந்த மலத்தை சுத்தம் செய்வது பன்றிதான்.

ஆஸ்திரேலியா போன்ற மேலை நாடுகளில் பன்றிகள் மிக சுத்தமான சூழ்நிலையில் வளர்க்கப்படுகின்றன என சிலர் வாதிட முற்படலாம். எந்த மாதிரி சுத்தமான சூழ்நிலையிலும் பன்றிகள் ஒன்றாகத்தான் அடைத்து வைக்கப்படுகின்றன. எத்தனைதான் சுத்தமான சூழ்நிலையில் நீங்கள் பன்றிகளை வைத்திருந்தாலும் – பன்றி இயற்கையாகவே கேடு கெட்டவை. தன்னுடைய மலத்தையும் – பிறருடைய மலத்தையும் சுவைத்துத் தின்னும் மிருகம் பன்றி.

உலகில் உள்ள மிருகங்களில் எல்லாம் வெட்கம் கெட்ட மிருகம் பன்றி:

உலகில் உள்ள மிருகங்களில் எல்லாம் வெட்கம் கெட்ட மிருகம் பன்றிதான். தனது நண்பர்களை அழைத்து வந்து தனது துணையுடன் நண்பர்களை உடலுறவு கொள்ளச் செய்யும் மிருகம்.

இது போன்ற காரணங்களால், வருமுன் காக்கும் நோக்கில் பன்றி உண்பதை இஸ்லாம் தடை செய்துள்ளது.

Leave a Response